கோவை இஎஸ்ஐ மருத்துவ கல்லூரி மருத்துவ மனைஅருகில், பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 324C, நேரு நகர் லயன்ஸ் சங்கம், கலாம் மக்கள் அறக்கட்டளை, FAIRA, குட் லைஃப் இரத்தப் பரிசோதனை நிலையம் ஆகியவை இணை ந்து இலவச சர்க்கரை நோய் கண்டறிதல், இரத்த பரி சோதனை முகாமை நடத்தியது.
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மாவட்ட தலைவர் ஆர். காளியப்பன், நேரு நகர் லயன்ஸ்சங்க செயலாளர் (Act) வி.மோகன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தன. கலாம் மக்கள் அறக்கட்டளை நிறுவனர் தலைவர், FAIRA தேசிய துணைத் தலைவர், வட்டார தலைவர் எஸ். செந்தில்குமார், இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் ரவீந்திரன், இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ரவிக்குமார் ஆகி யோர் துவக்கி வைத்தனர்.
முகாமில் 437 பேர் சர்க்கரை நோய் கண்ட றியும் இரத்தப் பரி சோதனை மற் றும் இரத்த அழுத்த பரிசோதனை செய்து கொண்டனர்.நேரு நகர் லயன்ஸ் சங்க சேர்பெர்சன் வி. கிருஷ்ணமூர்த்தி, டி. ரவிராஜா, கலாம் மக் கள் அறக்கட்டளை நண்பர்கள் ஜெகன், செல்வராஜ், கிரீஸ், பாலா, கேஎஸ்ஜி கலைக் கல்லூரி நாட்டு நலப்பணி மாணவர் முனீஸ்வர மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.