fbpx
Homeபிற செய்திகள்நிலையற்ற மூலப்பொருட்களின் விலையால் ஆயிரம் குறுந்தொழில்முனைவோர் பாதிப்பு- கோவை மாவட்ட தொழில்துறையினர் வேதனை

நிலையற்ற மூலப்பொருட்களின் விலையால் ஆயிரம் குறுந்தொழில்முனைவோர் பாதிப்பு- கோவை மாவட்ட தொழில்துறையினர் வேதனை

உற்பத்தி தொழில் துறையில் மூலப்பொருட்களின் விலை நிலையற்று காணப்படுவதால், கோவை மாவட்டத்தில் ஆயி ரம் குறுந்தொழில் முனை வோர் தொழிலைவிட்டு சென்று விட்டனர். ஒரு சிலர் தொழிலாளியாக மாறி வேறு நிறுவனங்களில் பணியாற்றி வரு வதாகவும் தொழில்துறையினர் வே தனை தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத்தின் (TACT) தலைவர் ஜேம்ஸ் கூறியதாவது:

உற்பத்தி தொழில்துறையில் ஸ்டீல், அலுமினியம் உள்ளிட்ட பல்வேறு மூலப்பொருட்கள் விலை கடந்த இரண்டு ஆண்டுகளாக தாறுமாறாக அதிகரித்தது. இதனால் குறுந்தொழில்முனைவோர் மிகுந்த சிரமத்திற்கு தள்ளப்பட்டனர்.

கோவை மாவட்டத்தில் மட்டும் 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட குறுந்தொழில் நிறுவனங்கள் இயங்கி வரும் சூழலில், இந்த விலையேற்றம் ஏறக்குறைய அனைத்து குறுந்தொழில் நிறு வனங்களையும் கடும் நெருக்கடிக்கு தள்ளியது.

தற்போது விலை குறைந்து வரும் நிலையிலும், விலையில் நிலையற்ற தன்மை நிலவும் காரணமாக, ஜாப் வொர்க் கணிசமாக குறைந்து விட்டது. இதனால் பெரும்பாலான நிறுவனங்களில் இயந்திரங்கள் இயங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நிலவிவரும் நெருக்கடி காரணமாக கோவை மாவட்டத்தில் ஆயிரம் குறுந்தொழில் முனைவோர் தொழிலை விட்டு சென்று விட் டனர். இதில் ஒரு சிலர் வேறு நிறுவனங்களில் தொழிலாளியாக பணியாற்றி வருகின்றனர்.

மூலப்பொருட்கள் விலை பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய அரசு கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும். ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதுபோன்ற நடவடிக்கை எடுக்காவிட்டால் குறுந்தொழில் நிறுவனங்கள் நெருக்கடியை எதிர் கொள்வது தொடர்கதையாகும் என்றார்.

கண்காணிப்புக் குழு
அமைக்க வேண்டும்
கோவை திருப்பூர் மாவட்ட கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத்தின் (COTMA) தலைவர் சிவகுமார் கூறியதாவது:

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் காப்பர், ஸ்டீல், அலுமினியம் உள்ளிட்ட அனைத்து மூலப்பொருட்கள் விலை டன் ஒன்றுக்கு 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.

ஆனால் விலையேற்றம் தொ டர்ந்து காணப்பட்ட கார ணத்தால் மூலப்பொருட்கள் விலை தாறுமாறாக உயர்ந்து 75 ஆயிரம் ஒரு லட்சம் ரூபாய் பல்வேறு விலையில் விற்பனை செய்யப்பட்டன.

நாடு முழுவதும் குறுந்தொழில் நிறுவனங்கள் தொடர்ந்து மத்திய அரசிடம் கோரிக்கையை விடுத்து வந்த சூழ்நிலையில், சமீபத்தில் மூலப் பொருட்கள் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட வரியை மத்திய அரசு உயர்த்தி உள்ளது.

இதன் காரணமாக ஸ்டீல் உள்ளிட்ட அனைத்து மூலப்பொருட்களின் விலை டன் ஒன்றுக்கு 8,000 ரூபாய் வரை குறைந்துள்ளது. எதிர்வரும் நாட்களில் மேலும் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மூலப்பொருட்கள் விலை குறைந்த போதும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு பயன் பெற முடியாத சூழ்நிலை உள்ளது.
காரணம் விலை மேலும் குறையும் என நம்பி ஜாப் வொர்க் வழங்கும் நிறுவனங்கள் அந்த பணியை தற்காலிகமாக குறைத்துள்ளனர்.

ஒவ்வொரு முறை விலை ஏறும்போது உடனடியாக அதை அமல்படுத்தும் மூலப் பொருட்கள் விற்பனை நிறுவனங்கள், விலை குறையும்போது அதே வேகத்தில் செயல்படுவதில்லை.

மூலப்பொருட்கள் விலை சீராக இருந்தால் மட்டுமே குறுந்தொழில் நிறுவனங்கள் ஜாப் வொர்க் பெறுவதில் எந்த சிரமமும் இருக்காது. எனவே தொழில் முனைவோர், அரசு அதிகாரிகள் உள்ளடக்கிய கண்காணிப் புக்குழு அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img