fbpx
Homeபிற செய்திகள்நிதி இலக்குகளை எட்ட கைகொடுக்கும் ஐசிஐசிஐ ப்ரூடென்ஷியல் லைஃப்

நிதி இலக்குகளை எட்ட கைகொடுக்கும் ஐசிஐசிஐ ப்ரூடென்ஷியல் லைஃப்

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனமான ஐசிஐசிஐ ப்ரூடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம், மொத்த வணிக மதிப்பின் அடிப்படையில், அனைத்துத் தகுதியுள்ள பாலிசிதாரர்களுக்கும் 2022-ம் நிதி ஆண்டுக்கான வருடாந்திர போனஸாக ரூ. 968.8 கோடியை அறிவித் துள்ளது.

இவ்வாறு ஊக்கத் தொகை வழங்கப்படுவது இது தொடர்ந்து 16-வது ஆண்டாகும். அத்துடன் இதுநாள் வரை இல்லாத அதிகபட்ச போனஸ் தொகை இதுவாகும். இது 2021-ம் நிதி ஆண்டுக்கான போனஸை விட 12 சதவீதம் அதிகமாகும்.

மார்ச் 31, 2022 முதல் நடைமுறையில் உள்ள அனைத்து பங்கேற்பு பாலிசிகளும் இந்த வருடாந்திர போனஸைப் பெற தகுதியுடையவை ஆகும். இது பாலிசிதாரர்களின் பலன்களில் சேர்க்கப்படும்.

ஏறக் குறைய ஒரு மில்லியன் (பத்து லட்சம்) பங்கேற்பு பாலி சிதாரர்கள் இதன் மூலம் பயனடைவார்கள். அவர்கள் தங்களது நீண்ட கால நிதி இலக்குகளை அடைவதற்கு இந்த போனஸ் தொகை உதவியாக அமையும்.

ஐசிஐசிஐ ப்ரூடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி என்.எஸ். கண்ணன் கூறுகையில், “2022-ம் நிதி ஆண்டிற்கான வரு டாந்திர போனஸாக மொத்தம் ரூ. 968.8 கோடியை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.

வாடிக்கையாளர் களின் பாதுகாப்பு மற்றும் நீண்டகால சேமிப்புத் தேவைகளுக்கு ஏற்ப சேவை செய்யும் நீடித்த நிலைத் தன்மையை உருவாக்குவதற்கான எங்கள் தொலைநோக்குப் பார்வை தொடர்ந்து எங்களுக்கு வழிகாட்டுகிறது.

வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்டு புதிய சேவைகளுக்கு வலுவான முக்கியத் துவம் வழங்குகிறோம்” என்றார்.

படிக்க வேண்டும்

spot_img