fbpx
Homeபிற செய்திகள்நிதியாண்டு 2023-ன் முதல் அரையாண்டில் எச்டிஎப்சி லைப் சிறப்பான செயல்பாடு

நிதியாண்டு 2023-ன் முதல் அரையாண்டில் எச்டிஎப்சி லைப் சிறப்பான செயல்பாடு

செப்டம்பர் 30, ல் முடிந்த தணிக்கை செய்யப்பட்ட தனியான மற்றும் மதிப்பாய்வு செய்யப்பட்ட ஒருங்கிணைந்த நிதி நிலை முடிவுகள் அறிக்கைக்கு நடைபெற்ற எச்டிஎஃப்சி லைஃப் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

சிறப்பான நிதி செயல்பாடுகள் குறித்து இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல்அதிகாரியுமான விபா பதல்கர் கூறியதாவது:

ஆயுள் காப்பீட்டுத் துறையில் எங்கள்நிறுவனம் நல்ல வளர்ச்சி கண்டு வருகிறது.
நிறுவனங்கள் இணைப்பிற்கு முந்தைய அடிப்படையில், கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான 3 மாதத்தில் இதன் பங்கு சந்தை மதிப்பு 14.6 சதவீதமாக இருந்தது.

அது தற்போது ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மாதத்தில் 15 சதவீதமாக அதிகரித்துள்ளது. தனிநபர் மற்றும் குழு வணிகங்களில் முதல் மூன்று ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் எங்கள் நிறுவனமும் ஒன்றாக உள்ளது.

 இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் புதிய ஆதரவுகொள்கைகள் மற்றும் ஊக்கம் ஆகியவற்றின் அடிப்படையில், இந்திய ஆயுள் காப்பீட்டுத் துறையின் வளர்ச்சி வாய்ப்புகள் நன்றாக இருப்பது குறித்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்.

இந்திய ஆயுள் காப்பீட்டின் உலகளாவிய தர வரிசையை பொறுத்தவரை 10-வது இடத்தில் இருந்த எங்கள் நிறுவனம் தற்போது 6-வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.

எங்களின் துணை நிறுவனமான எக்சைடு லைப் நிறுவனம், இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் இறுதி ஒப்புதலைப் பெற்று அதன்பேரில், கடந்த 14-ம் தேதி எச்டிஎஃப்சி லைஃப் உடன் இணைக்கப்பட்டது.

செப்டம்பர் 2021-ல் இதற்கான ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டு ஜனவரி 2022-ல் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இறுதியில் 14 மாதங்களுக்குள் எச்டிஎப்சி லைப்உடன் இணைக்கப்பட்டது.

இதற்கான ஒப்புதலை வழங்கிய இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்திற்கும் அதன் அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img