fbpx
Homeபிற செய்திகள்‘நாளைய விஞ்ஞானிகள்’ திட்டம் கோவையில் ஆட்சியர் துவக்கினார்

‘நாளைய விஞ்ஞானிகள்’ திட்டம் கோவையில் ஆட்சியர் துவக்கினார்

கோவை மாவட்டம், மண்டல அறிவியல் மையத்தில் மாணவ- மாணவியர்களின் அறிவுத்திறனை மேம்படுத்துவதற்காக, மண்டல அறிவியல் மையம், நம்ம கோவை, மேங்கோ எஜூகேஷன் இணைந்து செயல்படுத்தும், “நாளைய விஞ்ஞானி” திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தொடங்கி வைத்து, இலச்சினையும் வெளியிட்டார்.

மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், மண்டல அறிவியல் மையத்தின் மாவட்ட அறிவியல் அலுவலர் ஐ.கே.லெனின் தமிழ்கோ வன், ஆர்ஏஏசி செயலாளர் ஆர்.ரவீந்திரன், மேங்கோ எஜூகே ஷன் நிறுவனர் ஒபுலிசந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் சோமனூர் லிட்டரசி மிஷன் பள்ளியை சேர்ந்த 60 மாணவ, மாணவிகள், விளாங்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளி 50 மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனர்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) குறித்து மாணவ-மாணவியர்களின் அறிவுத்திறனை மேம்படுத்துவதற்காக மண்டல அறிவியல் மையம், நம்ம கோவை, மேங்கோ எஜூகேஷன் இணைந்து செயல்படுத்தும் “நாளைய விஞ்ஞானி” திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் அரசுப்பள் ளிகள், தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு, மண்டல அறிவியல் மையத்தில் உள்ள 170-க்கும் மேற்பட்ட அறிவியல் மாதிரிகள் மூலம், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) ஆகிய துறைகள் தொடர்பாக அடிப்படை அறிவுத்திறனை மேம்ப டுத்தும் பொருட்டு, இங்குள்ள பயிற் சியாளர்கள், தன்னார்வலர்கள் மூலம் பயிற்சி வழங்கப்படவுள்ளது.

இதன் முதற்பகுதியாக தன் னார்வலர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும். ஒவ்வொரு முறை பள்ளிகளிலிருந்து அறிவியல் பயணம் மேற்கொள்ளும் போது மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.

பள்ளி மாணவர்களின் அறிவியல் அறிவை மேம்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும், அறிவி யல் கண்காட்சி நடத்தப்படும். இதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளுக்கும் நம்ம கோவை மற்றும் மேங்கோ எஜூகேஷன் அமைப்புகள் மண்டல அறிவியல் மையத்துடன் இணைந்து செயல்படவுள்ளன.

அறிவியல் மையத்தில் உள்ள மாதிரிகள் குறித்து, விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சியை வெற்றிகரமாக முடித்த 4 தன்னார்வலர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

நம்முடைய அன்றாட வாழ்வில் நடைபெறும் சிறிய செயல்களில் கூட அறிவியல் உள்ளது. அதுபோன்ற பல்வேறு அறிவியல் செயல்முறைகளை செய்து பார்க்கக்கூடிய இடமாக இந்த அறிவியல் மையம் செயல்படுகிறது.

மற்ற மாவட்டத்தைவிட கோவை மாவட்டத்தில் அறிவியல் தொழில் நுட்ப வசதிகள் அதிகமாக உள்ளன. இத்திட்டத்தை பள்ளி மாணவ, மாணவிகள் சிறப்பாக பயன்படுத்தி, தங்கள் அறிவியல் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img