fbpx
Homeபிற செய்திகள்நாச்சிமுத்து கவுண்டர் கோப்பை - சிஆர்ஐ பம்ப்ஸ் கோப்பை: அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் கோவையில்...

நாச்சிமுத்து கவுண்டர் கோப்பை – சிஆர்ஐ பம்ப்ஸ் கோப்பை: அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் கோவையில் மே 29ம் தேதி தொடங்குகிறது

கடந்த 54 ஆண்டுகளாக ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டி மற்றும் 18 வருடங்களாக பெண்களுக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் கோவை யில் நடைபெற்று வருகின்றது. இப்போட்டிகளில் அகில இந்திய அளவில் முன்னணியில் உள்ள அணிகள் பெருமையுடன் கலந்து கொள்வார்கள்.

இப்போட்டிகள் மே 29ந் தேதி முதல் ஜுன் 3 – வரை 6 நாட்கள் கோவையில் நடைபெற உள்ளது. இதுகுறித்து கோவை மாவட்ட கூடைப்பந்து கழக தலைவர் திரு. ஜி. செல்வராஜ் கூறியதாவது :- ஆண்கள் பிரிவில் இந்திய அளவில் முன்னணியில் உள்ள முன்னணி அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதில் ஆண்கள் பிரிவில் – இந்தியன் ரயில்வே அணி, – இந்திய விமானப்படை அணி, “லோனா வாலா” – இந்திய கப்பல் படை அணி, – கேரளா மாநில மின்சார வாரியம் அணி, “பெங்களூரு” பாங்க் ஆப் பரோடா அணி, “சென்னை” – ஸ்போர்ட்ஸ் ஹால்டல் அஃப் எக்ஸலன்ஸ் அணி, “சென்னை” – தமிழ்நாடு கூடைப்பந்து கழகம் TRW அணி, “திருவனந்தபுரம்” – கேரளா போலீஸ் அணி மற்றும் “கோயம்புத்தூர்” – கோவை மாவட்ட கூடைப்பந்து கழக அணி ஆகிய 9 அணிகள் பங் கேற்கின்றன.

பெண்கள் பிரிவில் கொல்கத்தா கிழக்கு ரயில்வே அணி, ஹூபிளி தென்மேற்கு ரயில்வே அணி, “செகந் திராபாத்” – தென் மத்திய இரயில்வே அணி, “மும்பை” மத்திய இரயில்வே அணி, “திருவனந்தபுரம்” – கேரளா மாநில மின்சார வாரியம் அணி, கேரளா போலீஸ் அணி, சென்னை ரைசிங் ஸ்டார் அணி, மற்றும்- கோவை மாவட்ட கூடைப்பந்து கழக அணி ஆகிய 8 அணிகள் பங் கேற்கின்றன.

ஆண்கள் பிரிவில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசு ரூ.1,00,000 மற்றும் நாச்சிமுத்து கவுண்டர் சுழற்கோப்பையும், இரண்டாம் பரிசாக ரூ.50,000 மற்றும் டாக்டர். என். மகாலிங்கம் கோப்பையும், மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு பரிசாக ரூ.20,000, நான்காம் இடம்பிடிக்கும் அணிக்கு ரூ.15,000, மேலும் தேர்வு செய்யப்பட்ட அணிக்கு நன்னடத்தை ரேணுகா ராமநாதன் நினைவு விருது வழங்கப்படும்.

பெண்கள் பிரிவில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசு ரூ.50,000 மற்றும் சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் சுழற் கோப்பையும், இரண்டாம் பரிசாக ரூ.25,000 மற்றும் சுழற் கோப்பையும் மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு பரிசாக ரூ.15,000, நான்காம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.10,000, மேலும் இத்தொடரில் சிறப்பாக விளையாடும் வீராங்கனைக்கு சிறந்த விளையாட்டு வீராங்கனை என்ற விருதும் வழங்கப்படும்.

இப்போட்டிகள் 2022 மே 29 ம் தேதி துவங்கும், இந்த போட்டியில் ஜுன் 1 வரை சுழல் முறையிலும், பின்பு ஒவ்வொரு முதல் இரண்டு இடங்கள் பெறும் அணிகள் அரை யிறுதிக்கும் தகுதி பெறும்.

இதில் வெற்றி பெறும் அணிகள் ஜுன் 3 ம் தேதி நடைபெறும் இறுதி போட்டியில் விளையாடுவார்கள். இந்த போட்டிகள் கோவை வ.உ.சி. பூங்கா மாநகராட்சி விளையாட்டு அரங்கத்தில் தினமும் மாலை 5.00 மணிக்கு துவங்கி இரவு 9.00 மணி வரை நடைபெறும்.

இப்போட்டிக்கு பார்வைய £ளர் களுக்கு அனுமதி இலவசம். கூடைப்பந்து போட்டியை கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் மற் றும் துணை மேயர் ஆர். வெற்றி செல்வன் ஆகியோர் துவக்கி வைக்கிறார்கள்.

மேலும் கௌரவ விருந்தினராக ஆர்த்தோ ஓன் மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக் குனர் “டாக்டர். டேவிட் வி. ராஜன் கலந்து கொள்கிறார்.

சி. ஆர். ஐ. பம்ப்ஸ் நிறுவனங்களின் இணை நிர்வாக இயக்குனரும் கோவை மாவட்ட கூடைப்பந்து கழக தலைவ ருமான ஜி. செல்வராஜ் முன்னிலை வகிக்கின்றார்.

ஜுன் 3 ம் தேதி மாலை 8 மணிக்கு நடைபெறும் நிறைவு விழாவில் வெற்றி பெற்ற அணிகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் தலைமையில் பரிசு கள் வழங்கப்படும்.

படிக்க வேண்டும்

spot_img