fbpx
Homeபிற செய்திகள்நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் பள்ளிக் கட்டிடங்களை ஆய்வு செய்த ஆட்சியர்

நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் பள்ளிக் கட்டிடங்களை ஆய்வு செய்த ஆட்சியர்

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சி மற்றும் இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகள் மற்றும் சானல் தூர்வாரும் பணி யினை மாவட்ட ஆட்சியர் மா.அ ரவிந்த், செய்தியாளர்களுடன் நேற்று (அக்.25) ஆய்வு மேற்கொண்டார்.

அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
கன்னியாகுமரி மாவட்டத் திற்கு உட்பட்ட நாகர்கோவில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூ ராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள், சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட நாகர்கோவில் அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் 20 ஆண்டுகளுக்கு மேல் கட்டப்பட்ட வகுப்பறையினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பழுதடைந்த பகுதிகளை சீரமைக்குமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

சுமார் 22 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இடலாக்குடி அரசு தொடக்கப்பள்ளி வகுப்பறை கட்டிடத்தினையும் பார்வையிட்டு, கட்டிடத்தின் உறுதித்தன்மை குறித்து செயற்பொறியாளரிடம் கேட்டறியப்பட்டது.

இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆத் திக்காட்டுவிளை ஊராட்சி, சீயோன்புரம் அரசு தொடக்கப் பள்ளி சமையலறைக் கட்டிடம், கணியான்குளம் ஊராட்சி புளியடி அரசு தொடக்கப்பள்ளி வகுப்பறை கட்டடம், புத்தேரி ஊராட்சி புத்தேரி அரசு தொடக்கப்பள்ளி கட்டடத்தினை ஆய்வு மேற்கொண்டு அக்கட்டிடங்களின் உறுதித்தன்மை குறித்து தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், துறை அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது.

அத்துடன், வட கிழக்கு பருவமழை பெய்து வருவதால் பள்ளி மாணவ, மாண விகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் பழுதடைந்த கட்டிடங்களை விரைந்து சரிசெய்யவும், மிகவும் பழுதடைந்த கட்டிடங்களை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

தொடர்ந்து, தர்மபுரம் ஊராட்சி பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறு தித்திட்டத்தின் கீழ் அத்திக்கடை கால்வாயினை தூர்வாரும் பணி பார்வையிடப்பட்டது.

வாய்கால் வழியாக வரும் தண்ணீரை வீணாக்காமல் விவசா யிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் தெரிவித்தார்.

ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ச.சா.தனபதி, ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர், தலைமையா சிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img