fbpx
Homeபிற செய்திகள்நஸாரா டெக்னாலஜிஸ் உடன் இணைந்து வோடஃபோன் வழங்கும் ‘வி கேம்ஸ்’

நஸாரா டெக்னாலஜிஸ் உடன் இணைந்து வோடஃபோன் வழங்கும் ‘வி கேம்ஸ்’

முன்னணி தொலைத் தொடர்பு சேவை நிறுவனமான வோடஃபோன் ஐடியா லிமிடெட், இந்தியாவை அடிப்படையாகக் கொண்ட புதுவிதமான பாணிகளிலான கேமிங் மற்றும் விளையாட்டு ஊடக நிறுவனமான நஸாரா டெக்னாலஜிஸ் லிமிடெட் உடன் இணைந்து, வி செயலியில் ‘வி கேம்ஸ்’-யை அறிமுகப்படுத்துகிறது.

அதிரடி, சாகசம், ஆர்கேட், கேஷுவல், கல்வி, வேடிக்கை, புதிர், பந்தயம், விளையாட்டு, உத்திகள் சார்ந்த என்று 10 பிரபல வகைகளின் கீழ் உள்ள ஹெச்டிஎம்எல் 5 அடிப்படையிலான மற்றும் 1200-க்கும் மேற்பட்ட ஆண்ட்ராய்டு மொபைல் கேம்களுடன் ஆழமான கேமிங் அனுபவத்தை வி கேம்ஸ் இல் வழங்குகிறது வி செயலி.

வி கேம்ஸ் மூலமாக தடையற்ற கேமிங்கை வி வாடிக்கையாளர்கள் விளையாடி மகிழலாம் என்று பேசிய வோடஃபோன் இந்தியாவின் தலைமை சந்தைப்படுத்துதல் அலுவலர் அவ்னீஷ் கோஸ்லா, ஸ்மார்ட்ஃபோன்களின் அதிக பயன்பாடும் 4ஜி வசதியின் இருப்பும் அபாரமான வளர்ச்சிக்கு வழிவகுத்து வேடிக்கை மற்றும் பொழுதுபோக்கு பிரிவில் கேமிங் உள்ளடக்கத்தை மிகப்பிரபலமான தேர்வாக்கி உள்ளது. டிஜிட்டல் உள்ளடக்கச் செயல்பாட்டு உத்திகளில் பெரியளவில் கவனம் செலுத்தும் பகுதியாக கேமிங்கை காண்கிறோம் என்றார்.

வி கேம்ஸ் ஆரம்பகட்டமாக சாதாரண விளையாட்டுகளை தொடங்கும். மெதுவாக சமூக விளையாட்டுகளையும், எதிர்காலத்தில் இ-விளை யாட்டுகளையும் கூட தொடங்க விருக்கிறது. ‘இந்தியாவில் கேமிங் மட்டுமே பொழுதுபோக்கின் எதிர்காலமாக இருக்கப் போவதில்லை. ஆனால் ஒவ்வொரு நாளும் தங்களது மொபைல் போன்களில் கேம்களை விளையாடும் இந்தியர்களின் எண்ணிக்கை சில கோடிகள் என்பதால் ஏற்கனவே அது பொழுதுபோக்கின் முக்கிய அம்சமாகி விட்டது.

வி உடன் சேர்ந்து பணியாற்றுவதிலும், எங்களது கேமிங் உள்ளடக்கம், இ-விளையாட்டு மற்றும் ஈடுபாட்டை வெளிப்படுத்தும் பொழுதுபோக்கு உட்பட ஒட்டுமொத்த தயாரிப்புகளையும் அவர்களது மாபெரும் அளவில £ன பயனர்களுக்கு கிடைக்கச் செய்வதிலும் மகிழ்ச்சியடைகிறது நஸாரா, என்று தெரிவித்தார் நஸாரா டெக்னாலஜிஸ் லிமிடெட்டின் நிறுவனர் அண்டு குழும நிர்வாக இயக்குனரான நிதிஷ் மிட்டர்செய்ன்.

வி செயலியில் கிடைக்கும் வி கேம்ஸ்-ல் பிளாட்டினம் கேம்கள், கோல்டு கேம்கள், இலவச கேம்கள் என்று மூன்று பிரிவுகள் உள்ளன.

படிக்க வேண்டும்

spot_img