fbpx
Homeபிற செய்திகள்நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.18 லட்சத்தில் பணிகள் நிறைவு- அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்துவைத்தார்

நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.18 லட்சத்தில் பணிகள் நிறைவு- அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்துவைத்தார்

விருதுநகர் மாவ ட்டம், நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில்,  இந்திரா நகர், கணையமறித்தான், கட்டனூர் ஆகிய பகுதிகளில்  ரூ.18 லட்சம் மதிப்பில், கலையரங்கம் மற்றும் பயணியர் நிழற்குடையினை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று (நவ.6) திறந்து வைத்தார்.

மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி தலைமை தாங்கினார்.
நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், இந்திராநகர் கிராமத்தில் ரூ.6.50 லட்சம் மதிப்பில் கலையரங்கம், கணையமறித்தான் பகுதியில் ரூ.6.50 லட்சம் மதிப்பில் கலையரங்கம், கட்டனூர் கிராமத்தில் ரூ.5 லட்சம் மதிப்பில் பயணியர் நிழற்குடை என மொத்தம்  ரூ.18 லட்சம் மதிப்பில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார்.

மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.ரவிக்குமார், அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கல்யாணகுமார், திருச்சுழி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் பொன்னுசாமி, மாவட்ட கவுன்சிலர்கள் கமலி பாரதி, பாப்பா போஸ், தங்க தமிழ்வாணன், காரியாபட்டி பேரூராட்சித் தலைவர் செந்தில்  உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img