fbpx
Homeபிற செய்திகள்நரசிம்மநாயக்கன்பாளையத்தில் 1-18 வயது மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவமுகாமில் இலவச ஆலோசனை

நரசிம்மநாயக்கன்பாளையத்தில் 1-18 வயது மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவமுகாமில் இலவச ஆலோசனை

கோவை மாவட்ட ஒருங்கிணைந்த கல்வியின் உள்ளடங்கிய கல்விப் பிரிவின் சார்பில் நரசிம்மநாயக்கன்பாளையத்தில் நேற்று நடந்த மருத்துவமுகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் குழந்தைகள் கலந்து கொண்டு பலனடைந்தனர்.

பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் வசிக்கும் 1 முதல் 18 வயது வரையிலான மாற்றுத்திறனாளிகளுக்கென நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுபாஷ், பெ.நா.பாளையம் வட்டார கல்வி அதிகாரி ரங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோவை மாவட்ட ஒருங்கிணைந்த கல்விப் பிரிவின் உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ.இளமுருகன், உதவி திட்ட அலுவலர் ஆர்.செந்தில்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.மாவட்ட கவுன்சிலர் கார்த்திக், நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி மன்றத் தலைவர் மரகதம் வீரபத்திரன், துணைத் தலைவர் சண்முக சுந்தரம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு முகாமைத் தொடங்கி வைத்தனர்.

காலை 10 மணிமுதல் மதியம் 2 மணிவரை நடந்த இதில் முடநீக்கியல் மருத்துவர் ஸ்நேகல், கண் மருத்துவர் பிரியதர்ஷிணி, காது,மூக்கு தொண்டை நிபுணர் டாக்டர் வெங்கடேஷ்,மனநலம் குன்றியோருக்கான சிறப்பு மருத்துவர் டாக்டர் கிருத்திகா, குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் பார்கவி ஆகியோர் பங்கேற்று முகாமில் கலந்து கொண்டு மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர்.

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் தகுதி வாய்ந்தவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கினர். முகாமில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரேணுகா, ராஜேஸ்வரி, ஆசிரியப் பயிற்றுநர் பாக்யா, நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் புதிதாக பதவியேற்றுக் கொண்ட கவுன்சிலர்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

முகாமிற்கான ஏற்பாடுகளை சிறப்புக் கல்வி ஆசிரியர் ஆர்த்தி, தேன்மொழி,ப்ரியா ஆகியோர் செய்திருந்தனர். இறுதியில் சிறப்புக் கல்வி ஆசிரியர் இரா.விஜயகுமார் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img