fbpx
Homeபிற செய்திகள்நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலயமாக அறிவிப்பு: திருப்பூர் செல்வராஜ் எம்எல்ஏ முயற்சி வெற்றி- முதல்வருக்கு நன்றி...

நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலயமாக அறிவிப்பு: திருப்பூர் செல்வராஜ் எம்எல்ஏ முயற்சி வெற்றி- முதல்வருக்கு நன்றி தெரிவித்தார்

திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் வெளியிட் டுள்ள அறிக்கை:
திருப்பூரை அடுத்த சர்க்கார் பெரியபாளையம் அருகே 440 ஏக்கர் பரப்பளவில் நஞ்சராயன் குளத்தினை பாதுகாக்கப்பட்ட பறவைகள் சரணாலயமாக அறிவிக்க பல ஆண்டு காலமாக இயற்கை ஆர்வலர்கள், வன உயிரின காப்பாளர்கள் மற்றும் பறவை ஆராய்ச்சியாளர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்,

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலை மையில் திமுகழக அரசு அமைந்த பின் “திருப்பூர் இயற்கை கழகம்” அமைப்பினர், என்னை நேரில் சந்தித்து இது சம்பந்தமாக தாங்கள் தமிழக முதல்வரிடம் எடுத்துரைத்து பாதுகாக்கப்பட்ட பறவைகள் சரணாலயமாக அறிவிக்க செய்ய வேண்டுமென்று கோரிக்கை மனு அளித்தனர்.

இது சம்பந்தமாக 22.10.2021 அன்று முதல்வருக்கும் வனத்துறை அமைச்சருக்கும் நஞ்சராயன் குளத்தை பாதுகாக்கப்பட்ட பறவை கள் சரணாலயமாக அறிவிக்க வேண்டி கடிதம் எழுதினேன், இதனை ஏற்று முதல்வர் உத்தர வின் பேரில், வனத்துறை அமைச்சர் 25.04.2022 தினத்தன்று மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திருப்பூர் நஞ்சராயன் குளத்தை ரூ.7.50 கோடி மதிப்பில் தமிழகத்தின் 17வது பறவைகள் சரணாலயமாக அமைக்கப்படும் என்று அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

அதற்காக எனது நெஞ்சம் நிறைந்த நன்றியினை தெரிவிப்பதோடு இதற்காக தொடர் முயற்சி மேற்கொண்ட இயற்கை ஆர்வலர்களுக்கும் பறவைகள் ஆராய்ச்சியாளர்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img