fbpx
Homeபிற செய்திகள்நகர்நல மையம் கட்டுமானப்பணியினை தொடங்கி வைத்த கோவை மேயர்

நகர்நல மையம் கட்டுமானப்பணியினை தொடங்கி வைத்த கோவை மேயர்

கோவை மாநகராட்சி பொது நிதியிலிருந்து அன்பு நகர் பகுதியில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டிலும், ஆடிட்டர் வீதியில் ரூ.3.90 லட்சம் மதிப்பீட்டிலும் ஆழ்குழாய் கிணறு அமைத்து மின்மோட்டார் பொருத்தி கிணற்று நீர் விநியோகம் செய்யும் பணியினையும் மற்றும் மேட்டூர், ஈஸ்வரன் செட்டியார் வீதியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் நகர்நல மையம் கட்டுமானப்பணியினையும் மேயர் கல்பனா ஆனந்தகுமார் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்து, முதியோர்களுக்கான உதவித் தொகையை வழங்கினார்.

உடன் தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி, உதவி ஆணையர் அண்ணாதுரை, மருத்துவ அலுவலர் உதயகுமார், கார்த்திகேயன், மாமன்ற உறுப்பினர்கள் அப்துல்காதர், குணசேகரன், உதயகுமார், அஸ்லாம் பாஷா, உதவி செயற்பொறியாளர் கருப்புசாமி, உதவி பொறியாளர் சபரிராஜ், மண்டல சுகாதார அலுவலர் ராமு மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img