fbpx
Homeபிற செய்திகள்தேர்வு நேரங்களில் மன அழுத்தத்தில் இருந்து விடுபட மாணவர்களுக்கு பயிற்சி

தேர்வு நேரங்களில் மன அழுத்தத்தில் இருந்து விடுபட மாணவர்களுக்கு பயிற்சி

கோவை புலியகுளம் புனித அந்தோணியார் உயர்நிலைப்பள்ளியில் உடற்கல்வி மற்றும் தேசிய மாணவர்படை அமைப்பு சார்பாக கடந்த 17ம் தேதி அன்று பள்ளி வளாக கலையரங்கில் வைத்து மாணவர்களுக்கு தேர்வு நேரங்களில் ஏற்படும் மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு தேர்வை நல்ல முறையில் மேற்கோள்ள பயிற்சிகள் கொடுக்கப்பட்டது.

தற்போது உள்ள சூழ்நிலைகளில் மாணவர்கள் பல காரணங்களால் மன அழுத்தம் ஏற்பட்டு மாணவர்களால் படிப்பில் முழு கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டு கொண்டு இருக்கின்றது.

உதாரணமாக பொருளாதார நெருக்கடி, குடும்ப பிரச்சனைகள், கைபேசி பயன்படுத்துதல், நண்பர்களால் ஏற்படும் தொந்தரவு, போதை பழக்கம் போன்ற காரணங்களால் இளம் வயதிலேயே மன அழுத்தம் ஏற்பட்டு பல விதமான நோய்களுக்கும் உட்படுகிறார்கள்.

இதன்காரணமாக மாணவர்களால் படிப்பில் அதிக கவனம் செலுத்தப்பட முடிவது இல்லை. இந்த குறைகளை போக்கி மாணவர்கள் முழு ஆர்வத்துடன் படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டி மாணவர்களுக்கு கவுன்சிலிங் மற்றும் மன அழுத்தத்தில் இருந்து விடுபட சில பயிற்சிகளையும் கோவை அரசு கலை கல்லூரியின் உளவியல் துறையின் உதவி பேராசிரியை புவனேஸ்வரி அளித்தார். மாணவர்கள் பின்பற்ற வேண்டிய முக்கியமான வழிமுறைகள்.

1.பொற்றோரிடம் மனம் விட்டு பேசுவது. 2.எத்தனை இறுக்கமான சூழ்நிலைகள் இருந்தாலும் சிரிக்க கற்று கொள்ளுவது. 3.படிப்பதை தள்ளிவைக்க கூடாது. 4.வீட்டு வளாகம் அல்லது பள்ளி வளாகத்தில் சிறு தோட்டம் அமைத்து அதை பாதுகாப்பது. 5.மனதையும் இருக்கும் இடங்களையும் சுத்தமாக வைத்துக் கொள்ளுவது. 6.உடற்பயிற்சி மற்றும் மூச்சு பயிற்சி செய்வது. 7.இரவு நேரங்களில் தூங்காமல் படிக்க கூடாது,8.குழப்பவாதிகளை தவிர்ப்பது, 9.தேர்வில் மட்டும் கவனமாக இருப்பது. 10.சரியான திட்டமிடுதல்.

11.கூடா நட்பை தவிர்த்தல். 12.சரியான முறையில் கைபேசியினை பயன்படுத்துதல் போன்ற கருத்துக்களை ஒலி ஒளி மூலம் மாணவர்களுக்கு அவர் எடுத்துரைத்தார்.
இந்த நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியை அமலோற்பவ மேரி, துணை தாளாளர் அருட்பணி பிச்சை ராபர்ட், ஆசிரியர், ஆசிரியைகள், மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.

இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகளை பள்ளியின் தேசிய மாணவர்படை ஆசிரியர் ஞா.ஆல்பர்ட் அலெக்சாண்டர் செய்திருந்தார்.

படிக்க வேண்டும்

spot_img