கோவையில் நடந்த தேசிய அளவிலான வினாடி வினா போட்டியில், ஜிகேடி மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி முதலிடம் பிடித்தது.
கோவை கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி, வணிகவியல் துறை மற்றும் வணிகவியல் – வங்கி மற்றும் காப்பீட்டுத் துறை இணைந்து தேசிய அளவில் வினாடி வினா போட்டியை கடந்த 17-ம் தேதி நடத்தியது.
வணிகவியல் துறைத் தலைவர் முனைவர் ஏ. சாந்தி வரவேற்றார். கல்லூரி ஆலோசகர் மற்றும் செயலர் முனைவர் எஸ். ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். வணிகவியல் துறை புல முதன்மையர் முனைவர் கு.குமுதாதேவி, கணினி அறிவியல் துறை புல முதன்மையர் முனைவர் பி ஷர்மிளா, மேலாண்மைத் துறை புல முதன்மையர் முனைவர் பி. சியாம் சுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மைண்ட்கேம்ஸ் க்யூசிங் சிஇஓ (Mindgames Quizing), முனைவர் எம். ரங்கராஜன் ரவி துவக்கி வைத்தார். வினாடி வினா இரண்டு சுற்றுகளைக் கொண்டிருந்தது. நுண்ணறிவுள்ள கேள்விகள் கேட்டு பார்வையாளர்களை மகிழ்வித்தார்.
முதலாவது இடத்தை ஜிகேடி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி பிடித்தது. இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை வித்யா நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிடித்தது.
வணிகவியல் துறை இணைப் பேராசிரியர் முனைவர் ஆர்.பிரேமா நன்றி கூறினார். இந்தப் போட்டியில் 41 பள்ளிகள், 304 அணிகள் இந்தியா முழுவதிலும் இருந்து பங்கேற்றன.
வணிகவியல் துறைத் தலைவர் முனைவர் ஏ.சாந்தி, வங்கி மற்றும் காப்பீட்டுத் துறைத் தலைவர் முனைவர் சி.பால கிருஷ்ணன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.