fbpx
Homeபிற செய்திகள்தேசிய நல்லாசிரியர் விருதுபெற்ற ராமச்சந்திரனுக்கு பாராட்டு விழா

தேசிய நல்லாசிரியர் விருதுபெற்ற ராமச்சந்திரனுக்கு பாராட்டு விழா

ராமநாதபுரம் மாவட்ட ரோட்டரி சங்கங்கள் சார்பில் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ராமச்சந்திரனுக்கு பாராட்டு விழா ராமநாதபுரம் வைஸ்ராய் நளபாகத்தில் நடந்தது.

விழாவிற்கு ராம்நாடு ரோட்டரி சங்கத் தலைவர் பார்த்திபன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக டாக்டர் சின்னதுரை அப்துல்லா கலந்துகொண்டு வாழ்த்தி பேசினார்.

விழாவில் மண்டல துணை ஆளுநர்கள் பாபு,செந்தில்குமார், இளங்கோவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மேலும் தொழிலதிபர் ரமேஷ் பாபு,கீதா ரமேஷ், ரவிச்சந்திர ராமவன்னி, டாக்டர் அரவிந்தராஜ், பொறியாளர் காந்தி, முனைவர் சோமசுந்தரம், தொழிலதிபர் தினேஷ் பாபு, டாக்டர் ரம்யா தினேஷ், மார்னிங் ஸ்டார் செந்தில்குமார், ஆடிட்டர் லோகநாதன், ஜெயக்குமார், அபர்ணா மணிகண்டன், கீழக்கரை முனைவர் கபீர், ஆசிரியர் பன்னீர்செல்வம், சமூக சேவகர் டாக்டர் சாகுல் ஹமீது உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் புத்தகங்கள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. தேசிய நல்லாசிரியர் ராமச்சந்திரன் ஏற்புரை வழங்கினார். ராம்நாடு ரோட்டரி சங்க செயலாளர் கூரி தாஸ் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img