கரூரில் தேசிய கண்கள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு அவேர்னஸ் அப்பா விழிப்புணர்வு ஊர் வலமும், விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடந்தது.
எவர் கிரீன் பவுண்டேஷன், கரூர் ஹேண்ட்லூம் டெக்ஸ் டைல் சிட்டி லயன்ஸ் கிளப், அவேர்னஸ் அப்பா அம்மா நினைவு அறக்கட்டளை ஆகியன இணைந்து நடத்தியது.
தேசிய கண்கள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு திருப்பூர் அவேர்னஸ் அப்பாவின் மோட்டார் சைக்கிள் விழிப் புணர்வு பிரச்சாரத்தை மாநகர மேயர் கவிதா கணேசன் கொடியசைத்து துவக்கினார். துணை மேயர் தாரணி சரவணன், ஆணையர் ரவிச்சந்திரன், மாநகர நல அதிகாரி டாக்டர் இலட்சியவர்னா, பொறி யாளர் நக்கீரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கரூர் ஸ்ரீ சத்ரு சம்ஹாரமூர்த்தி கோவில் முன்பு அதன் தலைவர் ஸ்காட் தங்கவேல் தலைமையில் தேசிய கண்கள் பாதுகாப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. அவர்னஸ் அப்பா கரூர் ஹேண்ட்லூம் டெக்ஸ்டைல் சிட்டி லயன்ஸ் கிளப் தலைவர் மாரிமுத்து, கோவில் குரு முதல்வர் ஓம்சக்தி அருணாசலம் ஆகியோர் பேசினர். மணிமாறன் வரவேற்றார்.
பிரீத்தி நன்றி கூறினார். மாநகராட்சி மே.நி.பள்ளி கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், தேசிய கண்கள் பாதுகாப்பு தினவிழிப்புணர்வு நிகழ்ச்சி, கரூர் ஹேண்ட்லூம் டெக்ஸ்டைல் சிட்டி லயன்ஸ் கிளப் தலைவர் மாரிமுத்து தலைமையில் நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் ரேவதி வரவேற்றார்.
எவர்கிரீன் பவுண் டேஷன் சேர்மன் ஸ்காட் தங்கவேல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
ஆசிரியை மணிமொழி தனது கண்களை தானம் செய்வதாக மேடையில் அறிவித்து அதற்கான படிவத்தை லயன்ஸ் கிளப் தலைவரிடம் வழங்கினார்.
அவேர்னஸ் அப்பா பேசும்போது, இந்தியாவில் அனைவருக்கும் பார்வை தெரிய வேண்டும் என்ற இலட்சியத்தின் அடிப்படையில் விழிப் புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறேன்.
கண்களை தானம் செய்தால், ஓர் ஆண்டிற்கு இலட்சக்கணக்கானோர் கண் ஒளி பெறுவார்கள். இருக்கும்போது இரத்த தானம், இறந்த பின் கண் தானம் என்ற தானத்தை வாழ்க்கை யில்ஒவ்வொருவரும் நிறை வேற்ற வேண்டும் என்றார்.