fbpx
Homeபிற செய்திகள்தேசிய அளவிலான ஏரோ ஸ்கேட்டோ பால் போட்டி: வெற்றிக்கோப்பையுடன் திரும்பிய மாணவர்களுக்கு கோவை ரயில்நிலையத்தில் உற்சாக...

தேசிய அளவிலான ஏரோ ஸ்கேட்டோ பால் போட்டி: வெற்றிக்கோப்பையுடன் திரும்பிய மாணவர்களுக்கு கோவை ரயில்நிலையத்தில் உற்சாக வரவேற்பு

மகாராஷ்டிராவில் நடைபெற்ற தேசிய அளவிலான ஏரோ ஸ்கேட்டோ பால் விளை யாட்டு போட்டியில் தமிழக அணியில் கோவை மாவட்டம் சார்பாக கலந்து கொண்டு வெற்றி கோப் பையுடன் திரும்பிய பள்ளி சிறுவர்களுக்கு கோ வை ரயில் நிலையத்தில் அசத்தல் வரவேற்பு அளிக்கப்பட்டது.

7 வது தேசிய அளவிலான ஏரோ ஸ்கே ட்டோ பால் போட்டி மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்றது. இதில், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

தமிழ் நாடு சார்பாக கோவை உட்பட மாநிலத்தின் பல் வேறு மாவட்டங்களை சேர்ந்த, தமிழ்நாடு ஏரோ ஸ்கேட்டோ பால் வீரர், வீராங்கனைகள்,, 50 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இதில் கோவை மாவட் டம், கோவைப்புதூர் ஆஸ்ரமம் மெட்ரிக் பள்ளி யில் பயிலும் மாண வர்களான ஜெய்ஸ்னூ, அலிப்ஷா ஆகியோர் சப் ஜூனியர் பிரிவில் கலந்து கொண்டு விளையாடினர்.

இந்நிலையில் அனைத்து பிரிவுகளிலும் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் முதல் இடத்தை பிடித்தனர்.

வெற்றி கோப்பையுடன் கோவை ரயில் நிலையம் திரும்பிய ஜெய்ஸ்னு, அலிப்ஷா மற்றும் பயிற் சியாளர் அபுதாகிர் ஆகியோரை பெற்றோர் மற்றும் நண்பர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

தேசிய அளவில் வெற்றி பெற்று கோவை திரும்பிய மாணவர்கள் பேசுகையில், கடந்த ஐந்து வருடங்களாக சாலைகளில் பயிற்சி செய் தே இந்த வெற்றியை பெற்றுள்ளதாகவும், விளையாட்டு துறையில் கூடுதல் கவனம் செலுத்தும் தமிழக முதல்வர் நல்ல முறையில் பயிற்சி பெற கோவைப்புதூர் பகுதியில் பயிற்சி மைதானம் அமைக்க வேண்டும் எனக் கேட்டு கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img