fbpx
Homeபிற செய்திகள்தூய்மைப் பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

தூய்மைப் பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 25,81, மட்டும் வடக்கு மண்டலம் 3வது வார்டுகளில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு மாதந்தோ றும் முறையாக ஊதியம் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

இதனிடையே நடப்பு மாதம் தொடங்கி 18 நாட்கள் ஆகியும் தூய்மைப் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்பட வில்லை. இதனால் தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் இன்று பணிக்குச் செல்லாமல் அந்தந்த மண்டல அலு வலகங்களில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

துகுறித்து அவர்கள் கூறுகையில், “ஒவ்வொரு மாதமும் எங்களுக்கான ஊதியம் இழுத்தடிப்பு செய்யப்படுகிறது. இத னால் பணத் தேவை அதிகரித்து சிரமம் அடை கிறோம். எங்களுக்கு முறையான ஊதியத்தை குறித்த காலத்தில் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.” என்றனர்.

படிக்க வேண்டும்

spot_img