fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடி 3-ம் கேட் ரயில்வே மேம்பாலம் மீண்டும் திறப்பு சீரமைப்புப் பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர்...

தூத்துக்குடி 3-ம் கேட் ரயில்வே மேம்பாலம் மீண்டும் திறப்பு சீரமைப்புப் பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் கீதாஜீவன்

தூத்துக்குடி 3-ம் கேட் ரயில்வே மேம்பாலத்தில் நடைபெற்று வந்த சீரமைப்பு பணிகள் முடிந்ததையடுத்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பாலம் நேற்று (அக்.12) திறந்துவிடப்பட்டது.

தூத்துக்குடி 3-ம் கேட் மேம்பாலம் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்டது.
தற்போது மேம்பாலத்தில் சிறிய அளவில் பழுது ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேம்பாலத்தை சீரமைக்கும் பணிகள் கடந்த 12 நாட்களாக நடைபெற்று வந்தது.

இதன் காரணமாக தூத்துக்குடி மாநகரப் பகுதியில் குறிப்பாக அண்ணாநகர், டூவிபுரம், எட்டையாபுரம் ரோடு பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் இப்பணி களை கலெக்டர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன் பெரிய சாமி உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். இதனைத்தொடர்ந்து நேற்று சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் மேம்பாலம் சீரமைப்பு இறுதிகட்ட பணிகளை ஆய்வு செய்தார்.

பின்னர் நேற்று இரவில் இருந்து பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்துவிட நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளை கேட்டு கொண்டார். இதனை யடுத்து ரயில்வே மேம்பாலம் திறந்துவிடப்பட்டது.

நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளர் ஆறுமுகநயினார், உதவி கோட்ட பொறியாளர் திருவேங்கடராமலிங்கம், மாநில மீனவரணி துணைச் செயலாளர் புளோரன்ஸ், திமுக மாவட்ட துணைச்செயலாளர் ஆறுமுகம், மண்டலத் தலைவர் கலைச்செல்வி, பகுதிச் செயலாளர்கள் ராமகிருஷ்ணன், மேகநாதன், சிறுபான்மை பிரிவு ஜீவன் ஜேக்கப், முன்னாள் கவுன்சிலர் செல்வக்குமார், பகுதி இளைஞரணி ரவி, அல்பர்ட் பிரதீப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img