fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடியில் திருநங்கைகள் தினவிழா: நலஉதவிகளை அமைச்சர்கள் வழங்கினர்

தூத்துக்குடியில் திருநங்கைகள் தினவிழா: நலஉதவிகளை அமைச்சர்கள் வழங்கினர்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் சமூக நலத்துறை சார்பில் திருநங்கைகள் தின விழா நடைபெற்றது.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், மீன் வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன், மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இவ்விழாவில், பல்வேறு போட்டி களில் வெற்றி பெற்ற திருநங்கைகளுக்கு கேடயங்கள், திருநங்கைகளுக்கான அடையாள அட்டைகள் மற்றும் சமூக நலத்துறையின் மூலம் மகளிர்களுக்கு தையல் இயந்திரங்களை அமைச் சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர், சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கினர்.

இவ்விழாவில் மகளிர் திட்ட இயக்குனர் வீரபத்திரன், மாவட்ட சமூக நல அலுவலர் ரதிதேவி மற்றும் திருநங்கைகள், மகளிர்கள், அலுவலர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img