fbpx
Homeபிற செய்திகள்தீபாவளிக்கு சேலம் ஆவின் நிறுவனம் 69 மெ.டன் இனிப்பு வகைகள் விற்க இலக்கு- பொதுமேலாளர் செய்தியாளர்...

தீபாவளிக்கு சேலம் ஆவின் நிறுவனம் 69 மெ.டன் இனிப்பு வகைகள் விற்க இலக்கு- பொதுமேலாளர் செய்தியாளர் பயணத்தில் தகவல்

சேலம் ஆவின் நிர்வாகத்தின் மூலம், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு வகைகள் விற்பனைக்கு தயார் செய்யப்பட்டு வருவதை ஆவின் பொது மேலாளர் நா.சத்தியநாராயணன் நேற்று (அக்.18) செய்தியாளர் பயணத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

இது குறித்து ஆவின் பொது மேலாளர் கூறியதாவது:
சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் (ஆவின்) 1978-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.

சேலம் ஆவின் நிறுவனம் 791 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் மூலம் 49,000 பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து தினசரி 6.03 லட்சம் லிட்டர் பால் கொள் முதல் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்திலேயே அதிகபட்சமாக சுமார் 42 பால் உபபொருள்களுடன் சர்வதேச சான்றிதழுடன் சேலம் ஆவின் பால் நிறுவனம் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வருகிறது.

முதல்வர் கூட்டுறவு நிறுவனங்களை இலாப நோக்கம் அல்லாது சேவை நோக்கத்தோடு பொதுமக்களுக்கு பல்வேறு சேவைகள் கிடைத்திடும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் தரம் ஒன்றே குறிக்கோளாக கொண்டு ஆவின் நிறுவனம் பால் மற்றும் பால் உப பொருட்களை நுகர்வோருக்கு நியாயமான விலையில் வழங்கி விற்பனையில் தமிழகத்தின் முன் னோடியாக திகழ்ந்து வருகிறது.

சேலம் ஆவின் நிறுவனத்தின் மூலம் பால் உப பொருட்களான வெண்ணெய், நெய், தயிர், பால்கோவா, மைசூர்பா, குலாப் ஜாமுன், ரசகுல்லா, சாக்லேட், ஐஸ் கிரீம் முதலான பால் பொருட்களையும் உயரிய தரத்தில், தகுந்த சூழ்நிலையில், தேவையான சர்க்கரை அளவுடன் தயாரித்து ஆவின் பாலகங்கள் மற்றும் சில் லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்து வருகிறது.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு சேலம் ஆவின் பால் நிறுவனத்தின் சார்பில் சாதா மைசூர்பா, மில்க் கேக், பால்கோவா, கேரட் மைசூர்பா, ஸ்பெஷல் மைசூர்பா, நெய் லட்டு, மோதி லட்டு, முந்திரி கேக், ஸ்பெஷல் மிச்சர், வகைப்படுத்தப்பட்ட இனிப்புகள் விற்பனைக்கு தயார் செய்யப்படுகின்றன. இவை அனைத்தும் சுகாதாரமான முறை யில் ஆவினின் அக்மார்க் தரம் பெற்ற தூய பசும்நெய்யினால் தயாரிக்கப்பட்ட இனிப்பு வகைகளாகும்.

தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு சேலம் ஆவின் நிறுவனம் 69 மெட்ரிக் டன் இனிப்பு வகைகள் தயாரித்து விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்பணிகளில் 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் மூலம் சேலம் ஆவின் நிறுவனத்திற்கு ரூ.3.12 கோடி வருவாய் கிடைக்கும்.
இந்த இனிப்பு வகைகளை பொதுமக்கள் ஆவின் பார்லர்கள் மற்றும் ஆவின் சில்லரை விற்ப னையாளர்களிடம் இருந்து வாங்கி பயன்பெறலாம்.

தேவைக்கேற்ப தரமான முறை யில் தயாரிக்கப்பட்ட இனிப்பு வகைகளை சேலம் ஒன்றியத்தில் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம்.

சேலம் -9944584836, 9443026950, மேட்டூர் – 9488062377, எடப்பாடி -9629623749 மற்றும் 7373704800, 9751694664 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தேவையான ஆர்டர் களை தெரிவிக்கலாம்.

இவ்வாறு ஆவின் பொது மேலாளர் / மாவட்ட வருவாய் அலுவலர் நா.சத்தியநாராயணன் செய்தியாளர் பயணத்தின்போது தெரிவித்தார்.
ஆவின் உதவி பொது மேலாளர் பிரவினா, மேலாளர் பார்த்தசாரதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img