டாடா குழுமத்தில் இருந்து புதிதாக உருவாக்கப்பட்ட புதிய தலைமுறை நிறுவனமான டாடா எலக்ட்ரானிக்ஸ்(Tata Electronics), துல்லியமான கூறுகளை உற்பத்தி செய்வதில் கவனம் செலுத்துவதுடன், வர்த்தகச் செயல்பாடுகளுக்காகத் தயாராகிவரும் நிலையில், தனது பணியாளர்களின் எண் ணிக்கையைத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஏற்கனவே 8,000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றும் நிலையில், அடுத்த சில வாரங்களில் மேலும் பலரைப் புதிதாகச் சேர்க்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார் அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர்.
தமிழ்நாட்டிலுள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாபெரும் ஆலையைச் செயல்ப டுத்திவரும் டாடா எலக்ட்ரானிக்ஸ், அம்மா வட்டத்தைச் சேர்ந்த மக்களை நேரடியாகவோ அல்லது மறைமுக மாகவோ பணிகளில் ஈடுபடுத்துகிறது.
இது பற்றி டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் பேசுகை யில், “தற்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த 5,500 பேர் எங்களது நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர்.
எங்களது நிறுவனத்தின் வளர்ச்சித் திட்டங்களின் ஒரு பகுதியாக தமிழ்நாடும் அதன் மக்களும் விளங்குவதில் எங்களது அசைக்க முடியாத உறுதிப்பாட்டை மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறோம்; வர்த்தக நடவடிக்கைகளைத் தொடங்கும் நேரத்தில் எங்களது நிறுவனப் பணியாளர் களில் 80%க்கும் அதிகமானோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என்ற திட்டத்தையும் கொண்டிருக்கிறோம்” என்றார்.
டாடா எலக்ட்ரானிக்ஸில் குறிப்பிடத்தக்க அளவில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பணியாளர்கள் உள்ளனர். தமிழ்நாட்டின் வேறு பகுதிகளில் இருந்து வந்திருக்கும் பணியாளர்களுக்கு உணவு, தங்குமிடம், போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சரியான திறமையாளர்களை கண்டெடுக்கும் நோக்கில் தமிழக அரசுடன் இணைந்து கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் டாடா எலக்ட்ரானிக்ஸ் பணி யாளர் தேர்வு முகாம்கள் நடத்தப்படுகின்றன.
மாநிலத்தில் இளம் தலைமுறையிடையே திறமைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில் தமிழ்நாட்டிலுள்ள முன்னணி பல்கலைக்கழகங்களோடு கூட்டுச் செயல்பாட்டை மேற்கொள்கிறது டாடா எலக்ட்ரானிக்ஸ்.
வேலூரில் உள்ள விஐடி, கோவையில் பாரதியார் பல்கலைக்கழகம், தஞ்சாவூரில் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இந்நிறுவ னத்தின் தேவைகளோடு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் இளங்கலை, முதுகலை படிப்புகள் நடத்தப்படுகின்றன.
இந்த ஆண்டில் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்பிரிவுகளில் சேர்ந்துள்ளனர். அடுத்த ஆண்டு இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.