திமுகழக பொதுத் தேர்தலில் திருப்பூர் வடக்கு மாவட்டச் செயலாளராக தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக திருப்பூரில் தமிழ்நாடு மின் வாரிய பொது ஒப்பந்த தொழிலாளர் முன்னேற்ற கூட்டமைப்பு (தொமுச) சார்பில் போயம்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது. பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
இதற்கான ஏற்பா டுகளை தமிழ்நாடு மின் வாரிய பொது ஒப்பந்த தொழிலாளர் முன்னேற்ற கூட்டமைப்பு இணை பொதுச் செயலாளர் ஈ.பி.அ.சரவணன் செய்தி ருந்தார்.
இதில் பாண்டியன் நகர் பகுதி அவைத்தலைவர் தயானந்தம் , 7 வது வட்ட திமுக செயலாளர் சக்திநகர் செல்வராஜ், 8 வது வார்டு கங்காநகர் பொன்னுசாமி, தகவல் தொழில்நுட்ப அணி சுதாகர், மின்வாரிய ஒப்பந்த பொது தொமுச நிர்வாகிகள் சின்னதுரை, நாகராஜ், ஜீனராஜா, 7 வது வட்ட நிர்வாகிகள் பால்ராஜ், முருகன், மூர்த்தி, பாலு, மற்றும் கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.