fbpx
Homeபிற செய்திகள்திருப்பூர் மேயராக திமுகவை சேர்ந்த தினேஷ்குமார் போட்டியின்றித் தேர்வு

திருப்பூர் மேயராக திமுகவை சேர்ந்த தினேஷ்குமார் போட்டியின்றித் தேர்வு

திருப்பூர் மாநகராட்சி மேயராக திமுகவைச் சேர்ந்த என்.தினேஷ்குமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

திருப்பூர் மாநகராட் சியில் உள்ள 60 வார்டு களுக்கு நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணி 37 வார்டுகளில் வெற்றி பெற்றது.

இதில், திருப்பூர் மாநகராட்சி 49 ஆவது வார்டில் வெற்றி பெற்ற திமுகவைச் சேர்ந்த தினேஷ்குமாரை அக்கட்சி தலைமை, மேயர் வேட்பாளராக அறிவித்து இருந்தது.

இந்த நிலையில், திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.

இதில் மேயர் பதவிக்குப் போட்டியிட மாநகராட்சி ஆணையர் கிராந்தி குமார் பாடியிடம் தினேஷ்குமார் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் மாநகராட்சி மேயராக அறிவிக்கப்பட்டார்.

மேயராக தேர்வு செய்ய ப்பட்ட தினேஷ் குமார் திருப்பூர் வடக்கு மாநகர திமுக பொறு ப்பாளராக பொறுப்பு வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, மேயராக தேர்வு செய்யப்பட்ட தினேஷ் குமாருக்கு திருப்பூர் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினர் செல்வராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img