திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில், மாவட்ட திரைப்பட மற்றும் நாடக நடிகர்கள் நலச் சங்க அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், திருப்பூர் மாவட்ட திரைப்பட மற்றும் நாடக நடிகர்கள் நலச் சங்கத்தின் பெயரை, தமிழ்நாடு திரைப்பட நாடக நடிகர்கள் நலச் சங்கம் என்று மாற்ற முடிவு செய்யப்பட்டது.
கோவை மேற்கு பொள்ளாச்சியில் தமிழ்நாடு திரைப்பட நாடக நடிகர்கள் நலச் சங்க புதிய கிளை அலுவலகத்தை விரைவில் துவக்குவது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநிலத் தலைவர் நாகராஜ், துணைத் தலைவர் தென்றல் செல்வம், செயலாளர் மெர்சல் லட்சுமணன், பொருளாளர் யுவராஜ், பொள்ளாச்சி சங்கத் தலைவர் மகேஷ்வரன், செயலாளர் கருப்பசாமி, பொருளாளர் ஜி.பாலமுருகன், நிர்வாகக் குழு அமைப்பாளர்கள் குமார், துணைச் செயலாளர் முருகேசன், மாநில நிர்வாகக் குழு தாடி சரவணன், செந்தில்குமார், திருவண்ணாமலை மாவட்ட சங்கத் தலைவர் தமிழ் பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.