fbpx
Homeபிற செய்திகள்திருப்பூர் மாவட்டத்தில் “அனைவருக்கும் வீடு” திட்டத்தில் ரூ.302.39 கோடியில் கட்டப்பட்ட 3840 வீடுகள் ஒதுக்கீடு- செய்தியாளர்கள்...

திருப்பூர் மாவட்டத்தில் “அனைவருக்கும் வீடு” திட்டத்தில் ரூ.302.39 கோடியில் கட்டப்பட்ட 3840 வீடுகள் ஒதுக்கீடு- செய்தியாளர்கள் பயணத்தில் ஆட்சியர் வினீத் தகவல்

திருப்பூர் மாவட்டத்தில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம் பாட்டு வாரியம் “அனைவருக்கும் வீடு” திட்டத்தின் கீழ் மொத்தம் 3840 வீடுகள் ரூ.302.39 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய் யப்பட்டு வருகிறது.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எஸ்.வினீத் நேற்று (மே 31), திருமுருகன் பூண்டி நகராட்சியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ் விட மேம்பாட்டு வாரியம் சார்பில் “அனைவருக்கும் வீடு” திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளை ஆய்வு செய்தார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மத்திய, மாநில அரசுகளின், “அனைவருக்கும் வீடு” திட்டத் தில், 2.10 லட்சம் ரூபாய் மானியத்தில், பட்டா நிலத்தில் வீடு கட்ட விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் அறிவித் திருந்தது.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், மத்திய அரசின் “அனைவருக்கும் வீடு” திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், பட்டா உள்ள நிலங்களில் வசிக்கும் ஏழைகள் வீடு கட்ட ரூ.2.10 இலட்சம் மானியம் வழங் கப்படுகிறது.

இதில் மத்திய அரசு ரூ.1.50 இலட்சம், மாநில அரசு ரூ.60 ஆயிரம் வழங்கும். அஸ்திவார நிலை, ஜன்னல் மட்டம், கூரை மட்டம் என தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். பணிகள் முடிந்த பிறகு, ரூ.60 ஆயிரம் மானியம் விடுவிக்கப்படும்.

பொது மக் களிடமிருந்து பெறப்படும் விண் ணப்பங்கள் தலைமையிடத் திற்கு அனுப்பப்பட்டு, ஒப்புதல் பெறப்படும். தேர்வாகும் பயனா ளிகளுக்கு, வீடு கட்டும் போது, நான்கு கட்டமாக மானியம் விடுவிக்கப்படும். மாநகராட்சி பகுதியில் வசிக்கும், சொந்த இடம் வைத்துள்ளவர்கள் வீடு கட்ட மானியம் கோரி விண்ணப்பிக் கலாம்.

வட்டி மானியம்
இடத்தை, அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, தேவையான உதவிகளை செய்வார்கள். இடமிருந்தால் வட்டி மானியம் மத்திய அரசின் மற் றொரு திட்டத்தில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில், குடிசை அல்லாத பகுதியில் வீடு கட்ட, ரூ.2.10 இலட்சம் அளவுக்கு வட்டி மானியம் வழங்கப்படும். வங்கிகளில் பெறும், ரூ.6 இலட்சம் வரையிலான வீட்டுக்கடனுக்கு, 6.5 சதவீதம் அளவுக்கு வட்டி மானியம் வழங்கப்படும்.

அதிக கடன் பெற்றாலும், ரூ.6 இலட்சம் மட்டுமே வட்டி மானியம் கிடைக்கும். விருப்பமுள்ளவர்கள், பேரூராட்சி, நகராட்சி அல்லது மாநகராட்சி அலுவலகத்தை தொ டர்பு கொள்ளலாம்.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாடு வாரியம், திருப்பூர் கோட்டம் மூலம் திருப்பூர் மாவட் டத்தில் வசிக்கும் நகர்ப்புற வீடற்ற ஏழைகள் மற்றும் நீர் நிலை ஆக்கிரமிப்பாளர்களுக்கு “அனைவருக்கும் வீடு” திட்டத்தின் கீழ் மொத்தம் 3840 வீடுகள் ரூ.302.39 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. 2788 வீடுகளின் கட்டுமானப் பணிகள் ரூ.253.26 கோடி மதிப்பீட் டில் பணிகள் நடைபெற்று வருகின் றன.

ஜூனில் ஒதுக்கீடு
இதில், திருப்பூர் மாவட்டத் திலுள்ள திருமுருகன் பூண்டி நகராட்சியில் கட்டப்பட்டு வரும் பூண்டி திட்டப்பகுதியில் 224 வீடுகள் 18.8 கோடி மதிப்பீட்டில் ஜூன் மாத இறு திக்குள் முடிவுற்று, வீடற்ற ஏழை களுக்கும் மற்றும் நல்லாறு ஆக்கி ரமிப்பாளர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்படும்.

ஒவ்வொரு வீடும் 400 சதுர அடி பரப்பளவில் சமையல் அறை, படுக்கை அறை, வரவேற்பறை,, குளியலறை, கழிவறை உடன் அமைக்கப்படும். ஒரு வீட் டின் மதிப்பு ரூ.8.39 இலட்சம் ஆகும்.

இதற்கு பயனாளிகளின் பங்களிப்பு தொகையாக ரூ.89,600 செலுத்தப்பட வேண்டும்.
நடைபெற்று வரும் வீடு கட்டும் பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

இது தொடர் பாக சம்மந்தப்பட்ட துறை அலுவலர் களுக்கு அறிவுறுத்தி உள் ளேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர் எஸ்.வினீத் கூறினார்.

ஆய்வின் போது, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய செயற்பொறியாளர் குமார், உதவி செயற்பொறியாளர் அன் பழகன், உதவி பொறியாளர் சரவண பிரபு, வட்டாட்சியர் ராகவி, துறை சார்ந்த அலுவலர்கள், செய்தியாளர்கள் உள்ளிட்டோர் இருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img