தமிழக முன்னாள் முதலமைச்சரும் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 99வது பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூர் மத்திய மாவட்ட திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் கொங்கு நகர் பகுதி கழகம் 19 வார்டு மாமன்ற உறுப்பினர் லதா கேபிள் மோகன் அவர்களின் ஏற்பாட்டில் அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பின்பு ஆயிரம் பேருக்கு அசைவ உணவு வழங்கப்பட்டது
இந்த அன்னதானத்தை திருப்பூர் மத்திய மாவட்ட கழக செய லாளரும் தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான க.செல்வராஜ் அவர்களும் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ் குமார் அவர்களும் துவக்கி வைத்தனர்
இதில் தெற்கு மாநகர பொறுப்பாளர் டி கே டி நாகராஜ் வட்டக் கழக செயலாளர் கேபிள் மோகன் பகுதி கழக செயலாளர் போலார் சம்பத், மத்திய மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் சிட்டி கணேசன், மாவட்ட அவைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி, வடக்கு மாவட்ட மாநகர சிறுபாண்மை பிரிவு அமைப்பாளர் அன்பு என்கின்ற ரகுமான் மற்றும் வட்ட கழக பொறுப்பாளர்கள் சிக்கந்தர் பாட்சா சுரேஷ்குமார், தம்பிதுரை, பி.எஸ். குமார், கண்ணன், மகேஷ் குமார், சரண்ராஜ் சுப்பையா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் திரளாக பங்கேற்றனர்.