fbpx
Homeபிற செய்திகள்திருச்சியில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி

திருச்சியில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி

திருச்சி செவன்த் டே பள்ளி மாணவ, மாணவிகள் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மனித சங்கிலியில் கலந்து கொண்டனர். இந்த மனித சங்கிலியை திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலைய உதவி ஆணையர் அஜய் தங்கம் அவர்கள் தொடங்கி வைத்தார். பள்ளி மாணவ,மாணவிகள் 800 பேர் மற்றும் பெற்றோர்கள், காவல்துறையினர்,திருச்சி ரோட்டரி கிளப் ஆப் ராயல் உட்பட சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.பள்ளி முதல் கோர்ட்டு வரை அனைவரும் போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி மனித சங்கிலியில் ஈடுபட்டனர்.

முடிவில் பள்ளியின் முதல்வர் வில்சன் டேனியல் பத்திரிக்கையாளர்களிடம் கூறும்போது:இன்றைய இளைய சமுதாய மாணவ, மாணவிகள் மிகவும் மோச மான நிலைமைக்கு தள்ளப்பட்டு கொண் டிருக்கிறார்கள்,குறிப்பாக புகை பிடிக்கும் பழக்கம், மது அருந்தும் பழக்கம், போதை தரக்கூடிய லாகிரி வஸ்துகளை பயன்படுத்தி தங்களை சீரழித்து கொண்டிருக்கிறார்கள். இதை தடுத்து நிறுத்துவது நமது கடமை. நாம் இதனை எதிர்த்து நிற்க வேண்டும்.

இதற்காக நமது அரசாங்கம் பள்ளிகள் மூலமாக பல விழிப்புணர்வுகளை நடத்தி வருகிறது. இந்த விழிப்புணர்வு நடவடிக்கைக்கு ஒத்து போகும் வகையில் எங்களது செவன்த்டே அட்வென்டிஸ்ட் மேல்நிலைப்பள்ளி நிர்வாகம் மற்றும் திருச்சி மாவட்ட காவல் துறையும், ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி ராயல் இணைந்து இன்று மாபெரும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது.
இந்த மனித சங்கிலியை பள்ளி ஆசிரியர் மற்றும் ஊழியர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர் என பள்ளி முதல்வர் வில்சன் டேனியல் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img