fbpx
Homeபிற செய்திகள்திண்டுக்கல் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் - மேயர் இளமதி வழங்கினார்

திண்டுக்கல் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் – மேயர் இளமதி வழங்கினார்

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை மேயர் மற்றும் துணை மேயர் வழங்கினர்.

திண்டுக்கல் மாநகராட்சியில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. நேருஜி நினைவு நகரவை மேல்நிலைப் பள்ளி, அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, எம்.எஸ்.பி சோலை நாடார் நினைவு மேல்நிலைப்பள்ளி, புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் 13 பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிளை மாநகராட்சி மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா வழங்கினர்.

பின்னர் துணை மேயர் பேசியதாவது:
தமிழகத்தில் ஒரு சிறப்பான ஆட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறார். பள்ளி மாணவர்களுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் நமது முதல்வர் மாணவர்கள் மீது தனி அக்கறை கொண்டு செயல்படுகிறார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள் தான் இலவச பஸ் பாஸ் அறிமுக படுத்தினார். சத்துணவில் வாரம் தோறும் அனைத்து நாட்களிலும் முட்டை வழங்கியவர் நமது முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆவார்.

அரசு பள்ளி மாணவர்கள் உயர்ந்த பொறுப்பில் வருவதற்கு நமது முதல்வர் அவர்கள் கல்வித்தரத்தை மேம்படுத்தி வருகிறார்.

உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வரும் நமது முதல்வர் இன்னும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவார் இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சிகளில் திண்டுக்கல் மாவட்ட கல்வி அலுவலர் ஜான் பாக்கியம், மாநகராட்சி மண்டல தலைவர்கள் பிலால் உசேன், ஜான் பீட்டர், ஆனந்த், கார்த்திக், திமுக மாநகர அவைத்தலைவர் முகமது இப்ராஹிம், பொருளாளர் சரவணன், துணை செயலாளர்கள் முகமது சித்திக், அழகர்சாமி, மாநகர பகுதி செயலாளர்கள் பஜூலுல் ஹக், ஜானகிராமன், ராஜேந்திர குமார், சந்திரசேகரன், மேற்கு பகுதி இளைஞரணி அமைப்பாளர் பிரிட்டோ, நேருஜி பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயந்தி, அண்ணாமலையார் பள்ளி தலைமை ஆசிரியர் அகிலா, எம்.எஸ்.பி பள்ளி தாளாளர் முருகேசன், தலைமை ஆசிரியர் பாண்டியராஜன், மாநகராட்சி கவுன்சிலர்கள், திமுக நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img