fbpx
Homeபிற செய்திகள்திண்டுக்கல்லில் ரூ.79.07 கோடியில் சாலை மேம்பாட்டுப் பணிகள்

திண்டுக்கல்லில் ரூ.79.07 கோடியில் சாலை மேம்பாட்டுப் பணிகள்

திண்டுக்கல் மாவட்டத்தில் முதலமைச்சரின் சாலை மேம் பாட்டுத் திட்டத்தின்கீழ், நெடுஞ்சாலைத் துறையின் மூலம் சாலை மேம்பாட்டுப் பணிகள் தொடக் கவிழா கலெக்டர் விசாகன் தலைமையில் ஆத்தூரில் நடை பெற்றது.

கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி சாலைப் பணி களை தொடங்கி வைத்து பேசிய தாவது: தமிழகத்தில் கிராமப்புற சாலைகளை முக்கிய சாலை களுடன் இணைக்கும் வகையில், சாலை மேம்பாட்டுப் பணிகள், முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், நெடுஞ்சாலைத் துறையின் மூலம் செயல்படுத்தப்படவுள்ளன.

விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை கொண்டு செல்ல வும், பள்ளிக் குழந்தைகள் போக்குவரத்து நெரிசல் இன்றி செல்லவும் சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு வரு கின்றன.

கிராமப்புற சாலைகள் மேம்படுத்தப்பட்டு, செம் மைப்படுத்தப்பட்டு நான்கு வழிச் சாலைகளுடன் இணைக்கப்பட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஆத்தூர் மற்றும் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் முதலமைச்சரின் சாலை மேம் பாட்டுத் திட்டத்தின்கீழ், மெட்டூர் பலக்கனூத்து, ஒட்டன் சத்திரம், தாராபுரம், திருப்பூர் சாலை, காமுப்பிள்ளை சத்திரம் முதல் கன்னிவாடி வரை இருவ ழிச்சாலையை நான்குவழிச் சாலையாக அகலப்படுத்தி மேம் பாடு செய்தல் ரூ.79.07 கோடி மதிப்பீட்டில் 2 பணிகளாக மேற்கொள்வதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தப்பணிகளை 13 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஆத்தூர் மற்றும் பித்தளைப்பட்டி ரவுண்டானா பகுதியில் விபத்து அபாயம் உள்ள பகுதியாக உள்ளது.

இதுபோன்ற பகுதிகளை கண்டறிந்து அவற்றை திருத்தம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கலைஞர் ஆட்சிக் காலத்தில் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் 200 கிராமங்களை இணைக்கும் வகையில் அனைத்து சாலைகளும் ரூ.5 கோடி மதிப்பில் தார்ச்சாலைகளாக மேம்படுத்தப்பட்டன.

சட்டமன்றம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலி ருந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைக்க நடவ டிக்கை மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

மக்கள் தேவைக் காகத்தான் அரசு என்பதைத் தான் “எனது சக்தி இருக்கும் வரை, தமிழக மக்களுக்காக உழைப்பேன்” என்று முதலமைச் சர் தெரிவித்தார். அவருக்கு மக்கள் சக்தி இருக்கிறது.

தமிழகத்தை போல் வளர்ச்சியடைந்த மாநிலம் வேறு எங்கும் இல்லை. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் வகையில் அரசின் அனைத்துத் திட்டங் களும் கடைகோடி மக்களையும் சென்றடையும் வகையில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் பேசினார்.

ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தலைவர் சிவ குருசாமி, ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர் மகேஸ்வரி, நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்புப் பொறியாளர் மாரிமுத்துராஜன், கோட்டப் பொறியாளர் ரமேஷ், உதவி செயற்பொறியாளர்கள் கண்ணன், வீரன், உதவிப் பொறியாளர்கள் பரத், யோகவேல், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பாப்பாத்தி, நாகவள்ளி, காணிக்கைசாமி, ஆத்தூர் தாசில்தார் சரவணன், சீவல்சரகு ஊராட்சி மன்ற தலைவர் ராணி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img