fbpx
Homeபிற செய்திகள்தர்மபுரி மாவட்ட நியாயவிலைக் கடைகளில் பிரதமர் படம் வைக்க பாஜக வலியுறுத்தல்

தர்மபுரி மாவட்ட நியாயவிலைக் கடைகளில் பிரதமர் படம் வைக்க பாஜக வலியுறுத்தல்

பாரதிய ஜனதா கட்சியின் தர்மபுரி மேற்கு மண்டல ஆய்வுக் கூட்டம் அதகப்பாடி பஞ்சாயத்து சின்ன தடங்கம் கிராமத்தில், சுத்த சன்மார்க்க சங்கம் கட்டிட வளாகத்தில் நடைபெற்றது.

மேற்கு மண்டலத் தலைவர் கணபதி தலைமை வகித்தார்.
மாநில செயற்குழு உறுப்பினர் ஹரி கோடீஸ்வரன் முன்னிலை வகித்தார். விவசாய அணி மாவட்ட தலைவர் வெற்றிவேல், ஒன்றிய பொது செயலாளர் அன்பரசன், ஒன்றிய பொருளாளர் வெற்றிவேல், ஒன்றிய செயலாளர் துரைமுருகன், அருள்குமார், இளைஞரணி ஒன்றியத் தலைவர் கார்த்திக், ஓ பி சி அணி ஒன்றிய தலைவர் சஞ்சீவன் உட்பட நூற்றுக்கு மேற்பட்ட நிர்வாகிகளும், கட்சித் தொண்டர்களும், உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், வருகின்ற பாராளுமன்றத் தேர்தலுக்கான உறுப்பினர் சேர்க்கை மற்றும் பிரதமர் செயல்பாடுகள் குறித்து பேசப்பட்டன. மத்திய அரசாங்கத்தின் திட் டங்கள் மக்களிடையே சேரும் விதமாக கட்சி தொண்டர்களிடையே விவாதங்கள், கருத்துகள் எடுத்துரைக்கப்பட்டன.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும், பிரதமர் படங்கள் வைக்க வேண்டும் என்றும் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
மேற்கு ஒன்றிய ஆய்வுக் கூட்டம்

பாரதிய ஜனதா கட்சியின் நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய ஆய்வுக் கூட்டம் இண்டூர் கிருஷ்ணா திருமண மண்டபத்தில் நடைபெற்றது

கூட்டத்தில் பூரண மண்டலமாக ஆக்க அனைத்து கிளை தலைவர்கள், சக்தி கேந்திர தலைவர்கள், ஒன்றிய தலைவர்கள், மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் உறுதி ஏற்றனர்.

பிரதமர் உருவப் படங்கள் அனைத்து நியாயவிலைக் கடைகளில் வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தர்மபுரி மாவட்ட தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர், மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் ஆகி யோர் தலைமை வகித்தனர்.

மாவட்ட அரசு தொடர்பு பிரிவுத் தலைவர் பொன்னுசாமி, செயலாளர் வெள்ளையன், ஒன்றியத் தலைவர் மாதன், செயலாளர் செல்வம், அமைப்பு சாரா தொழிலாளர் சங்கத் தலைவர் பிரகாசம், இளைஞரணிப் பொருளாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img