fbpx
Homeபிற செய்திகள்தர்மபுரி சட்டமன்ற தொகுதியில் புதிய பேருந்து வழி தடத்தை துவக்கி வைத்த வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ

தர்மபுரி சட்டமன்ற தொகுதியில் புதிய பேருந்து வழி தடத்தை துவக்கி வைத்த வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், மானியதஅள்ளி ஊராட்சி கீழ்பூரிக்கல், மேல்பூரிக்கல் மாணவ, மாணவிகள் தொப்பூர் சென்று கல்வி பயிலவும், பொதுமக்கள் மருத்துவ சிகிச்சை பெறவும் தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் இருந்து தொப்பூர் வரை இயக்கப்படும் பேருந்தை மானியதஅள்ளி ஊராட்சி, கீழ்பூரிக்கல், மேல்பூரிக்கல் வழியாக தொப்பூர் வரை பேருந்து இயக்க அப்பகுதி பொதுமக்கள் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ் வரனிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.

போக்குவரத்து துறை அலுவர்களிடம் தொடர்ந்து வலியுறுத்தி மேற்கண்ட கிராமங்களுக்கு பேருந்து இயக்க ஏற்பாடு செய்து, பேருந்து சேவையை தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் கீழ்பூரிக்கல் மற்றும் மேல்பூரிக்கல் ஆகிய இடங்களில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அப்போது அவருக்கு மாணவ, மாணவிகள், பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து, நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ஜோதிலட் சுமிசண்முகம் நிதி ஒதுக்கீட்டில் கீழ்பூரிக்கல் மற்றும் மேல்பூரிக்கல் ஆகிய கிராமங்களில் தலா ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக அமைக்கப்பட்ட 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை பொதுமக்களின் குடிநீர் பயன்பாட்டிற்காக எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

மேலும், தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியில் இருந்து மானியதஅள்ளி ஊராட்சியில் மேல்பூரிக்கல் அரசு பள்ளி அருகில் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் அமைத்தல் மற்றும் பரிகம் மாரியம்மன் கோவில் அருகில் ரூபாய் 4.00 இலட்சம் மதிப்பீட்டில் சாலையோர தடுப்புச்சுவர் அமைத்தல் ஆகிய இரண்டு பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்து அப்பணிகளுக்கான பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்ச்சியில், ஒன்றிய சேர்மேன் மகேஸ்வரிபெரியசாமி, ஒன்றிய கவுன்சிலர் ஜோதிலட்சுமிசண்முகம், நிர்வாகிகள் – மாநில செயற்குழு உறுப்பினர் பெ.பெரியசாமி, மாவட்ட அமைப்பு செயலாளர் ப.சண்முகம், மாவட்ட துணை செயலாளர் த.காமராஜ், மாவட்ட இளைஞர் சங்க துணை செயலாளர்கள் சதிஷ், சின்னசாமி, ஒன்றிய செயலாளர்கள் ராஜீவ்காந்தி, அறிவு, ஒன்றிய தலைவர் பச்சியப்பன் மற்றும் இராஜேந்திரன், பிரகாஷ், பொன்மாது, சக்தி, இளஞ்செழியன், கிரி உள்ளிட்ட ஊர்பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img