fbpx
Homeபிற செய்திகள்தர்மபுரியில் தீவிர துப்புரவு சிறப்பு முகாம்: நகராட்சித் தலைவர் தொடங்கி வைத்தார்

தர்மபுரியில் தீவிர துப்புரவு சிறப்பு முகாம்: நகராட்சித் தலைவர் தொடங்கி வைத்தார்

தர்மபுரி நகராட்சி சார்பில் டவுன் பஸ் நிலையம், ராஜகோபால் கவுண்டர் பூங்கா முற்றும் 26-வது வார்டு எஸ்.வி. ரோடு உள்ளிட்ட பகுதிகளில் தீவிர துப்புரவு சிறப்பு முகாம் நடைபெற்றது.

இந்த முகாமுக்கு நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது தலைமை தாங்கி துப்புரவு முகாமை தொடங்கி வைத்தார். நகராட்சி துணைத்தலைவர் நித்யா அன்பழகன், நகராட்சி ஆணையாளர் சித்ரா சுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த முகாமையொட்டி அந்தந்த பகுதிகளில் உள்ள தேங்கி கிடக்கும் குப்பைகள் அகற்றப்பட்டு தூய்மை படுத்தப்பட்டது. இந்த பணியில் நகராட்சியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் சுசீந்திரன், ரமணசரன், நாகராஜன், சீனிவாசலு, நகராட்சி கவுன்சிலர்கள் ராஜாத்தி ரவி, செந்தில்வேல், தனலட்சுமிசுரேஷ்,ஜெகன் மற்றும் நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img