தமிழ்நாடு தாங்டா சாம்பியன்ஷிப் போட்டி 2022 கடந்த 19.08.2022 தேதி முதல் 21.08.2022 வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்றது. தாங்-டா விளையாட்டானது மணிப்பூர் மாநிலத்தின் தற்காப்பு கலையாகும். இதில் 200க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் சப்-ஜூனியர், ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவுகளில் கலந்து கொண்டனர்.
இப்போட்டியினை உலக தாங்-டா பெடரேசன் தலைவர் பிரேம்குமார் சிங் துவக்கி வைத்தார். இப்போட்டியில் தமிழ்நாடு தாங்டா சங்கம் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இந்த தாங்-டா சாம்பியன்ஷிப் போட்டி யில் புனாபா அனுசுயா மற்றும் புனாபா அமா ஆகிய இரு பிரிவுகளில் போட்டி நடை பெற்றது. இதில் கோவை மாவட்டம், இம்மார்டல் ஸ்போட்ஸ் அகாடமியிலிருந்து 19 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு 11 தங்கம், 6 வெள்ளி மற்றும் 2 வெண்கலம் வென்றனர்.
சப்ஜூனியர் புனாபா அமா ஆண்கள் பிரிவுகளில் -29 கிலோ பிரிவில் சச்சின் ஆலிவர் வெள்ளி பதக்கம், -31 கிலோ பிரிவில் பிரனேஷ் வெள்ளி பதக்கம், -37 கிலோ பிரிவில் ராகுல் வெள்ளி பதக்கம், -41 கிலோ பிரிவில் நிகிலேஷ் தங்கப்பதக்கம், 49 கிலோ பிரிவில் சர்வேஷ் தங்கப்பதக்கம், +53 கிலோ பிரிவில் சச்சின் வெண்கலப்பதக்கம், சப்-ஜூனியர் பெண்கள் பிரிவுகளில் -29 கிலோ பிரிவில் நேத்ரா ஸ்ரீ தங்கப்பதக்கம், 49 கிலோ பிரிவில் சனா லஷ்மிநாராயணன் வெள்ளி பதக்கம், -53 கிலோ பிரிவில் அக்ஷதா தங்கப்பதக்கம், சப்-ஜூனியர் புனாபா அனுசுபா ஆண்கள் பிரிவுகளில் -29 கிலோ பிரிவில் யதுநந்தன் வெள்ளி பதக்கம், 33 கிலோ பிரிவில் நௌனீத் வெண்கலப்பதக்கம், +53 கிலோ பிரிவில் பிரணவேஷ் தங்கப்பதக்கம், ஜூனியர் புனாபா அமா ஆண்கள் பிரிவுகளில் -52 கிலோ பிரிவில் ஹேமந்த் தங்கப்பதக்கம், -60 கிலோ பிரிவில் சச்சின் வெள்ளி பதக்கம், ஜூனியர் புனாபா அமா பெண்கள் பிரிவுகளில் -48 கிலோ பிரிவில் திவ்யா தங்கப்பதக்கம், -56 கிலோ பிரிவில் ஷிவானி தங்கப்பதக்கம், 60 கிலோ பிரிவில் மேரிபிரியதர்ஷினி தங்கப்பதக்கம், ஜூனியர் புனாபா அனுசுபா ஆண்கள் பிரிவில் 460 கிலோ பிரிவில் ஜெயசிம்மன் தங்கப்பதக்கம், சீனியர் புனாபா அமா ஆண்கள் பிரிவில் 54 கிலோ பிரிவில் அருண்பாண்டியன் தங்கப்பதக்கம் வென்றனர்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை கோவை மாவட்டம் தாங்டா அசோஷியேசன் செயலாளர் டாக்டர் பி.செல்வகுமார், இம்மார்டல் ஸ்போர்ட்ஸ் அகாடமி பயிற்சியாளர்கள் சரண்ராஜ். ரஞ்சித்குமார் மற்றும் பெற்றோர்கள் பாராட்டி வாழ்த்தினர்.