fbpx
Homeதலையங்கம்தமிழக அரசின் சாதனை பயணம்!

தமிழக அரசின் சாதனை பயணம்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 4 நாள் பயணமாக கொங்கு மண்டலத்துக்கு வந்துள்ளார். நேற்று கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகில் ஆச்சிப்பட்டி பகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் இணையும் விழா நடைபெற்றது.

இதில் அ.தி.மு.க., பா.ஜ.க., தே.மு.தி.க., உள்ளிட்ட பல கட்சிகளின் உறுப்பினர்கள் 55 ஆயிரம் பேர் கூண்டோடு விலகி முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்.

இதில், அ.தி.மு.க-வில் 10 ஆண்டு காலமாக இருந்த கவுண்டம்பாளையம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., வி.சி.ஆறுக்குட்டி, அ.தி.மு.க- மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினராக இருந்த அபிநயா, தே.மு.தி.க-வில் 15 ஆண்டு காலமாக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ-வும், மாவட்ட செயலாளருமான பனப்பட்டி தினகரன், பா.ஜ.க-வில் 22 ஆண்டு காலமாக இருந்து, மாநில மகளிர் அணி செயலாளராக பதவி வகித்த மைதிலி, ம.நீ.ம மாவட்டத் தலைவராக இருந்த வினோத் குமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் 952 பேரும் அடங்குவர்.

முன்னதாக ஈச்சனாரியில் நடந்த அரசு நலத்திட்ட விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சியமைத்த ஒன்றரை ஆண்டில் செய்யப்பட்ட சாதனைகளைப் பட்டியலிட்டார்.

பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து வசதி, பெட்ரோல் விலை 3 ரூபாய் குறைப்பு, ஆவின் பால் விலை 3 ரூபாய் குறைப்பு, நகைக்கடன்கள் ரத்து, கூட்டுறவுக் கடன்கள் ரத்து, இல்லம் தேடிக் கல்வி, மக்களைத் தேடி மருத்துவம், நான் முதல்வன், இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என சாதனைகளை அடுக்கிக் கொண்டே போனார்.

இவை மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் சாதனைகள்.
பட்டியலைப் பார்க்கும்போது ஒன்றரை ஆண்டில் இத்தனை சாதனைகளா? என வியக்க வைக்கிறது. இந்த ஆட்சி குறுகிய காலத்தில் செய்த இச்சாதனைகள்,- இதுவரை எந்த ஆட்சியும் செய்யாத சாதனைகள் ஆகும். இப்போது இந்தியாவில் எந்த மாநில அரசும் செய்யாத சாதனைகளாகவும் பிற மாநிலங்களை ஆளுபவர்களால் ஆராயப்படுகிறது.

அதேபோல ஒரே மேடையில் 55 ஆயிரம் மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணைந்தது மட்டும் என்ன சாதாரண விஷயமா? இது மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெருஞ்சாதனை அல்லவா?
அவதூறாக விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு சம்மட்டி அடி தரும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் சாதனைப்பயணம் தொடரட்டும்!

படிக்க வேண்டும்

spot_img