கோவை புறநகர் கிழக்கு மாவட்டம், கிணத்துக்கடவு மேற்கு ஒன்றியத்திற்கு உட் பட்ட முத்தூரில் கழக அர சின் ஓர் ஆண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் முகமதுயாசின் தலைமையிலும், ஊராட்சி கழக செயலாளர் ராமலிங்கம் முன்னிலையிலும் நடைபெற்றது.
இதில், தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர் வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
தமிழக முதல்வராக ,தலைவர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற வுடன் 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று கூறினார்.
அதில் ஆட்சி பொறுப்பேற்ற ஒரே ஆண் டில் 70 சதவீத விழுக்காடு வாக்குறுதிகளை நிறைவேற்றித் தந்துள்ளார், முதலமைச்சர்.
தேர்தலுக்கு முன்பாக கொ ரோனா தொற்று உச்சத்தில் இருந்தபோது, கடந்த அதிமுக ஆட்சியில் கொரோனா நிவா ரண நிதியாக 5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எடுத்துச் சொன்னார்கள்.
ஆனால் அடிமை அதிமுக ஆட்சி தேர்தலை, மனதில் வைத்து கொண்டு, ஆயிரம் ரூபாய் மட்டுமே நிவாரண நிதியாக வழங்கினர்.
அப்பொழுது கழக தலைவர் அவர்கள், ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் மீதி உள்ள நான்காயிரத்தை வழங்குவோம் என்று எடுத்துச் சொன்னார்கள். அதன்படி, தமிழக மக்கள் எல்லாருடைய நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கிற தமிழக முதல்வர் அவர்கள் தங்கள் வாக்குறுதியை நிறைவேற்றி தந்திருக்கிறார்கள்.
இரண்டாவது கையெழுத்தாக அரசுப் பேரு ந்துகளில் பெண்களுக்கு இல வசப் பேருந்து உத்தரவை வழங்கிய முதல்வர் தமிழக முதல்வர்.
ஆவின் பால் விலை, பெட்ரோல் விலை குறைப்பு என பல்வேறு திட்டங்களை அறிவித்த முதல்வர்,
“உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” நிகழ்ச்சி மூலம் மாவட்டந்தோறும் சென்று, மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து, அதற்கென தனித் துறையை உருவாக்கி அந்த மனுக்கள் மீதான நடவடிக்கை எடுத்தார்கள்.
தமிழக முதல்வரை பொ றுத்த வரை கடந்த ஆட்சி யில் விடுபட்ட முதியோர் உதவித் தொகைகளையும் வழங்க உத்திர விட்டவர்.
கோவை மாவட்டம் முழுவதும் தான் சென்று ஒரு லட்சத்து 40 ஆயிரம் மனுக்களை பெற்று அதில் ஒரே நாளில், அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய மகத்தான முதல்வர் நமது முதல்வர்.
நீட் தேர்வு கடந்த காலத்தில் அதிமுக ஆட்சியாளர்களின் ஆதரவுடன் வந்துள்ள நிலையில், அதற்கு தொடர்ந்து எதிர்த்து வலியுறுத்தி வருகின்றார் நமது முதல்வர் அவர்கள்.
ஒன்றிய அரசை பொறுத்த வரை நம்மிடம் இருந்து 100 ரூபாய் வரி வாங்கி கொண்டு இதில், 33 ரூபாயை நமக்கு அளித்து விட்டு, 66 ரூபாயை பாஜக ஆளும் மாநிலத்தின் வளர்ச்சி பணிகளுக்கு பயன் படுத்துகின்றனர்.
இந்தியாவில் முதல்வர்களுக் கெல்லாம் முதல்வராக நமது முதல்வர் இருந்தாலும், நமது திட்டங்கள் அனைத்தும் இந்தியா முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் என்பது தான் நமது முதல்வரின் ஆசை.
அதற்கு வரும் பாராளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு அனைவரும் வாக் களிக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி கூ றினார்
இந்த தெருமுனை கட்டத்தில், மாவட்ட பொறுப்பாளர் மருத மலை சேனாதிபதி, மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் Ex Mla,மாவட்ட கவுன்சிலர் ராஜன், பொதுக்குழு உறுப்பினர் நடரா ஜன், மற்றும் இரத்தினசாமி, குப்புசாமி, விசி.ராஜன், மகளி ரணி அமைப்பாளர் கமலம், சிறப்பு பேச்சாளர் தூத்துக்குடி ஆனந்தன், மதுக்கரைநகர கழக செயலாளர் சசிகலா, பேரூர் கழக செயலாளர் கனகராஜ், டேனியல், நகர் பாலு,வெள்ளலூர் ராஜ், சதீஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.