சமீபத்தில் துருக்கியில் நடந்த பெண்கள் உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் ஐதராபாத்தைச் சேர்ந்த நிகாத் ஜரீன் சாதனை படைத்து தங்கப் பதக்கத்தை உச்சி முகர்ந்தார்.
உலகப் போட்டியில் தங்கம் வென்ற ஐந்தாவது இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார். இதேபோல் ஜெர்மனியில் நடந்த உலக ஜூனியர் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் ஈஷா சிங் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.
தங்க மங்கையர் இருவரும் ஐதராபாத்தில் தெலுங்கானா உதயமான தின விழாவில் பாராட்டி கவுரவிக்கப்பட்டனர். இருவருக்கும் ஏற்கெனவே அறிவித்தபடி தலா ரூ.2 கோடிக்கான காசோலையை தெலுங்கானா முதல்மந்திரி சந்திரசேகர ராவ் வழங்கி பாராட்டினார்.
தங்க மங்கைகள் இருவருக்கும் நமது பாராட்டுகள்!