சென்னையைத் தளமாகக் கொண்டு இயங்கும் டாக்டர் அகர்வால்ஸ் ஹெல்த் கேர் லிமிடெட் (DAHCL), ரூ.1050 கோடி என்ற சாதனை அளவு முதலீட்டு நிதியை திரட்டுவதை வெற்றிகரமாக நிறைவு செய்திருக் கிறது.
யுஎஸ்-ஐ சேர்ந்த முன்னணி முதலீட்டு நிறுவனங்களில் ஒன் றான டெக்ஸாஸ் பசிபிக் குரூப் (TPG )-ன் நடுத்தர சந்தை மற்றும் வளர்ச்சி ஈக்விட்டி நிறுவனமான TPG க்ரோத் மற்றும் DAHC-ல் ஏற்கனவே முதலீடு செய்திருக்கும் சிங்கப்பூரைத் தலைமையகமாகக் கொண்ட உலகளாவிய முதலீட்டு நிறுவனமான டெமாசெக் ஆகிய வற்றிலிருந்து இந்நிதி முதலீடு பெறப்பட்டிருக்கிறது.
டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனைகள் குழுமத்தின் தலைவர், டாக்டர் அமர் அகர் வால் கூறியதாவது: டிபிஜி க்ரோத், டெமாசெக் போன்ற பிரபல முதலீட்டாளர்களிட மிருந்து கிடைத்திருக்கும் ஆதரவு, தரமான கண் பராமரிப்பு சிகிச்சையை வழங்க வேண்டுமென்ற எமது குறிக்கோளையும் செயல்பாட்டையும் மேலும் வலுப்படுத்துகிறது.
கண் பராமரிப்பு சிகிச்சைக்கு மிக சமீபத்திய தொழில்நுட்பங்களை பயன்படுத்தவும் புதிய முதலீட் டுத்தொகை பயன்படுத் தப்படும் என்றார்.
டிபிஜி க்ரோத்-ன் நிர்வாக இயக்குநர் அங்குர் தடானி பேசுகையில், “பார்வைத்திறன் குறைபாடு மிக அதிகமாக இருக்கின்ற இந்நாட்டில் இன்றியமையாத கண் பராமரிப்பு சிகிச்சையை வழங்குவதில் முதன்மை வகிக்கும் தனியார் துறை கண் பராமரிப்பு சங்கிலி தொடர் நிறுவனத்தோடு கூட்டாண்மையாக செயல்படுவது குறித்து பெருமை கொள்கிறோம்,” என்றார்.
ஏடிவி பார்ட்னர்ஸ்-ன் இணை நிறுவனரும், அதன் நிர்வாக இயக்குநருமான சுரேஷ் பிரபாலா கூறிய தாவது: இந்நிறுவனம் மென்மேலும் தொடர்ந்து வெற்றிச் சாதனை களை நிகழ்த்த அதன் நிர்வாகத்தை வாழ்த்துகிறோம்.
டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை குழுமத்தின் தலைமை செயலாக்க அதிகாரி டாக்டர் அடில் அகர்வால் கூறியதாவது: டிபிஜி க்ரோத் குழுவினரோடு இணைந்து ஒரு புதிய பயணத்தை தொடங்குவதை ஆர்வத்தோடு எதிர்நோக்குகிறோம்.
அடுத்த 3 ஆண்டுகளில் எமது வலை யமைப்பை இரட்டிப்பாக்க இப் புதிய முதலீடுகள் எங்களுக்கு உதவும்.
இந்தியாவில் 12 மாநிலங் களிலும், உலகளவில் 11 நாடு களிலும் இக்குழுமத்தின் மருத் துவமனைகள் சேவையாற்றி வரு கின்றன.