ஜூனியர் உலகக் கோப்பை துப் பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப், 25 எம் ஸ்டாண்டர்ட் பிஸ்டல் ஓபன் போட்டியில், கோவை பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் பிபிஏ மூன்றாம் ஆண்டு மாணவி நிவேதிதா வி.நாயர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
தமிழ்நாட்டிலிருந்து நமது நாட் டைப் பிரதிநிதித்துவப் படுத்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே ஒரு வீராங்கனை இவர்தான். கத்தாரில் ஆசிய சாம்பியன்ஷிப் மற்றும் பெரு, தென் அமெரிக்காவில் உலக சாம்பியன்ஷிப்பைத் தொ டர்ந்து, நிவேதிதா பெற்ற மூன்றா வது சர்வதேச பதக்கம் இதுவாகும்.
கல்லூரித் தலைவர் முனைவர் நந்தினி ரங்கசாமி, கல்லூரி தாளாளர் முனைவர் யசோதா தேவி, கல்லூரி முதல்வர் முனைவர் நிர்மலா மற்றும் உடற்கல்வி இயக்குனர் முனைவர் ஜெயசித்ரா ஆகியோர் நிவேதி தாவையும் அவரது பெற்றோரையும் பாராட்டினார்கள்.
நிவேதிதாவின் பயிற்றுனர் அவ ரது தந்தை என்பது குறிப்பிடத் தக்கது.