fbpx
Homeபிற செய்திகள்ஜிஆர்ஜி கல்லூரி மாணவிகளின் சமூக சேவை திட்டம் துவக்கம்

ஜிஆர்ஜி கல்லூரி மாணவிகளின் சமூக சேவை திட்டம் துவக்கம்

கோவை அருகே நவக்கரையில் ஜிஆர்ஜி மேலாண்மை கல்லூரி, பிஎஸ்ஜி ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் சமூக சேவை நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
ஜிஆர்ஜி மேலாண்மை கல்லூரி, நவக்கரை பஞ்சாயத்தில், அதன் முதல் சமூக சேவை திட்டத்தை கடந்த 24-ம் தேதி துவங்கியது.

தலைமை விருந்தினராக காக்னிஜன்ட் (Cognizant) அறக்கட்டளையின் இந்தியத் தலைவர் பாலகுமார் தங்கவேலு கலந்து கொண்டார். ஜிஆர்ஜி மேலாண்மை கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள், நவக்கரை கிராம மக்கள், “நம்ம நவக்கரை” என்ஜிஓ உறுப்பினர்கள் மற்றும் இதர என்ஜிஓக்கள் கலந்து கொண்டனர்.

டாக்டர் பி. சதாசிவம், இயக்குநர், ஜிஆர்ஜிஎஸ்எம்எஸ், பேராசிரியர் எஸ். பாலசுப்ரமணியன், இயக்குநர், ஜிஆர்ஜிசிஏஎஸ், என் எஸ் மகேஷ்வரன், தலைவர், நம்ம நவக்கரை, கோமதி செந்தில் குமார்,பஞ்சாயத்து தலைவர், மாவுத்தம்பதி, டாக்டர் சவிதா நாயர், டீன், ஜிஆர்ஜிஎஸ்எம்எஸ் , ஆர் இனிதா ரீனா, திட்டம் ஒருங்கிணைப்பாளர் உள் ளிட்டோர் பேசினர்.

சமூக சேவை நிகழ்ச்சி திட்டத்தில், ஜிஆர்ஜி மேலாண்மை கல்லூரி மாண விகள் கிராமத்தில் மாற்றங்களைக் கொண்டு வர பல்வேறு சுற்றுச்சூழல் மற்றும் சமூக திட்டங்களைச் செயல்படுத்துவர். வனம் மேம்பாட்டுத் திட்டம், நீர்நிலை மேலாண்மை, வேளாண்மை மேம்பாடு, கழிவு மேலாண்மை, சுயஉதவிக்குழு மேம்பாடு மற்றும் பழங்குடிப் பள்ளி மாணவர்களுக்கான திறன் மேம்பாடு ஆகிய 6 திட்டங்கள் மாணவிகளால் மேற்கொள்ளப்படும்.

மாணவ திட்டக் குழுக்கள் கிராமங்கள், விவசாய நிலங்கள், நீர்நிலைகள், காடு வளர்ப்பு பகுதி – வனம் மற்றும் அரசு பழங்குடியினர் பள்ளி ஆகியவற்றையும் பார்வையிட்டன.

படிக்க வேண்டும்

spot_img