fbpx
Homeபிற செய்திகள்சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வனப்பகுதிக்குள் இருந்து வேறிடத்திற்கு குடியமர்த்த தெங்குமரஹாடா கிராம மக்களிடம் கருத்து கேட்பு

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வனப்பகுதிக்குள் இருந்து வேறிடத்திற்கு குடியமர்த்த தெங்குமரஹாடா கிராம மக்களிடம் கருத்து கேட்பு

தெங்குமரஹாடா கிராம மக்களை வேறு இடத்திற்கு குடியமர்த் துவது தொடர்பாக கருத் தறிதல் கூட்டம் நடந்தது. நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டம், அல்லிமாயார் வருவாய் கிராமத்தில் அமைந்துள் ளது தெங்குமரஹாடா என்ற குக்கிராமம்.

இக்கிராமம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 500 ஏக்கர் நிலம் அடர்ந்த வனப்பகுதிக்குள் வருகிறது. இதனால் அக்கிராமத்தில் உள்ள பொதுமக்களை வேறு இடத்திற்கு குடியமர்த்துவது தொடர்பாகவும், இந்நிலத்தின் சட்டரீதியான நிலையினை அங்கு வாழும் பொதுமக்களுக்கு தெரியப் படுத்தி, அவர்களின் கரு த்துகளை கேட்டறிய சென் னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதன்படி, நீலகிரி, ஈரோடு, கோவை மாவட்ட ஆட்சியர்கள், மூன்று மாவட்ட வன அலுவலர்கள் சத்தியமங் கலம், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர்கள் அடங்கிய குழு, கடந்த 6-ம் தேதி தெங்குமரஹாடா கிராமத்திற்கு சென்றது.

அங்கு பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதி நிதிகளிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தியது.

இதில் பங்கேற்றவர்கள் தெரிவித்த கருத்துகள், சென்னை உயர்நீதிமன் றத்தில் அறிக்கையாக தாக் கல் செய்யப்படும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img