fbpx
Homeபிற செய்திகள்சென்னையில் ஏஐஎன்யூ தொடங்கும் புதிய மருத்துவமனை

சென்னையில் ஏஐஎன்யூ தொடங்கும் புதிய மருத்துவமனை

இந்தியாவில் சிறுநீரக சிகிச்சைத் துறையில் மிகப்பெரிய சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத் துவமனைகள் குழுமத்தில் ஒன் றான சிறுநீரகவியல் மற்றும் சிறுநீர்பாதை யியலுக்கான ஏஷியன் இன்ஸ்டிடியூட் (கிமிழிஹி), சென்னை நுங்கம்பாக்கத்தில் புதிய மருத்துவமனையை தொடங்கு கிறது.

இது சென்னையில் ஏஐஎன்யூ வின் முதல் மருத்துவமனையாகவும், இந்தியாவில் 7-வது மருத்துவ மனையாகவும் இருக்கிறது.

100 படுக்கை வசதிகள் கொண்ட இந்த மருத்துவமனையை ஏஐஜி ஹாஸ்பிட்டலின் தலைவரும் பத்மபூஷன் விருது பெற்றவருமான டாக்டர் டி.நாகேஷ்வர் ரெட்டி திறந்து வைத்தார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளுக்கு மிக நவீன ஹச்டிஎஃப் டயாலிசிஸ் சிகிச்சை வசதியுடன் 25 படுக்கைகள் கொண்ட ஒரு சிறப்பு டயாலிசிஸ் யூனிட் இம்மருத்துவமனையில் நிறு வப்பட்டுள்ளது.

ஏஐஎன்யூ சென்னையின் மேலாண் இயக்குந ரும், தலைமை சிறுநீர் பாதையியல் மருத்துவர் பி.அருண்குமார் கூறிய தாவது: சிறுநீரக மாற்று சிகிச்சை செயல் திட்டத்தை வெற்றிகரமாக மேற்கொள்வதில் ஏஐஎன்யூவி-ன் கடந்த கால சாதனை வரலாறு சிறப்புமிக்கது. நோயாளிகளுக்கு மிகச் சிறந்த பராமரிப்பை உறுதி செய்கிறது என்றார்.

ஏஐஎன்யூ மேலாண் இயக்குநர் டாக்டர் சி.மல்லிகார்ஜுனா கூறியதாவது: இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் டயாலிசிஸ் யூனிட்களைக் கொண்டிருக்கும் மருத்துவக் குழுமம் என்ற அங்கீ காரமும் எங்களுக்கு இருக்கிறது.

நோயாளிகளின் நலனை மையமாகக் கொண்ட எமது அணுகுமுறை, சிறுநீரகவியல் மற்றும் சிறுநீர் பாதையியலில் செழுமையான அனுபவம் மற்றும் சிறப்பான நிபுணத்துவம், சர்வதேச அளவில் புகழ்பெற்ற மருத்துவநிபுணர்களின் குழு மிக நவீன உட்கட் டமைப்பு வசதிகள் ஆகிய அனைத்தும் ஒருங்கிணைந்து, சென் னைக்கும், தமிழகத் திற்கும் இத்து றையில் மிக உயர்ந்த தரத்தில் சிகிச்சைப் பரா மரிப்பு வழங்கப்படுவதை உறுதி செய்யும் என்றார்.

எக்ஸ்-ரே, அல்ட்ராச வுண்டு, மல்டி-ஸ்லைஸ் சிடி ஸ்கேன், யூரோ¬ டனமிக்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய நோயறிதல் சாதனங்க ளும் மிக நவீன ஆய்வகமும் இந்த மருத்துவ மனைக் குள்ளேயே இடம் பெற் றிருக்கிறது.

படிக்க வேண்டும்

spot_img