கோவை மாவட்டம், சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 1431-ம் பசலி ஆண்டிற்கான வருவாய்த் தீர்வாய முகாமில் 250 பயனாளிகளுக்கு ரூ.37.16 இலட் சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் நேற்று (ஜூன் 1) வழங்கினார்.
பின்னர் மாவட்ட ஆட் சியர் செய்தியாளர்களிடம் தெரிவித்த தாவது:
தமிழக அரசின் வருவாய் துறை யின் மூலம் ஒவ்வொரு வருடமும் வருவாயத் தீர்வாயம் (ஜமாபந்தி) நடத்தப்பட்டு வருவாய்த்துறையின் கோப்புகள், ஆற்றிய பணிகள் குறித்து சம்மந்தப்பட்ட வட் டாட்சியர் அலுவலகங்களில் கிராம அளவில் தணிக்கை செய் யப்பட்டு வருகின்றன.
அதன்படி, கோவை மாவட்டத்தில் 1431 -ம் பசலி ஆண்டிற்கான வருவாய்த் தீர்வா யம் 11 வட்டாட்சியர் அலு வலகங்களிலும் கடந்த 26-ம் தேதி முதல் நடைபெற்று வருகின்றது.
மாவட்ட ஆட்சியர் சூலூர் வட்டத்திற்கான வருவாய்த் தீர்வாய அலுவலரக நியமிக்கப்பட்டு, கடந்த 26.05.2022 முதல் 01.06.2022 வரை நடைபெற்ற முகாமில் சூலூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் 1261 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
வருவாய்த்துறை மற்றும் இதர துறைகள் குறித்து வரப்பெற்ற இம்மனுக்கள் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டு ஒவ்வொரு மனு மீதும் தீர்வுகள் காணப்பட்டு வருகின்றன.
இதே போன்று மற்ற வட்டங்களில் நடைபெற்றுவரும் வருவாய்த் தீர்வாயத்தில் மனுக்கள் பெறப் பட்டு வருகின்றன. இம்மனுக் கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
முகாம்களை வட்டங்கள்தோ றும் சிறப்பாக நடத்திட துணை ஆட்சியர் நிலையிலான வரு வாய்த் தீர்வாய அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களின் தலை மையில் நடைபெற்று வருகின்றன.
சூலூரில் நடைபெற்ற வருவாய்த் தீர்வாயத்தில் பெறப்பட்ட மனுக்களின் மீது நடவடிக்கை மேற்கொண்டு முதற்கட்டமாக 250 பயனாளிகளுக்கு ரூ.37.16 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித் தார்.
முன்னதாக, சூலூர் வட்டாட் சியர் அலுவலகத்தில் 37 பயனாளிகளுக்கு ரூ.15,08,503/- மதிப்பில் இலவச வீட்டுமனைப் பட்டாக்களும், 112 பயனாளிகளுக்கு ரூ.13,44,000/- மதிப்பில் முதி யோர் உதவித்தொகையும் 13 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1,56,000/- ஓய்வூதிய உதவித் தொகையும், 57 பயனாளிகளுக்கு ரூ.6,84,000/- விதவைகளுக்கான ஓய்வூதிய உதவித்தொகையும், 9 பயனாளிகளுக்கு உரிமைச் சான்று, 9 பயனாளிகளுக்கு நத்தம் பட்டா மாறுதல் சான்றுதல்களும், 11 பயனாளிகளுக்கு குடும்ப அட் டைகளையும் என மொத்தம் 250 பயனாளிகளுக்கு ரூ.37.16 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் வழங்கினார்.
முகாமில் சூலூர் வட்டாட்சியர் சுகுணா உட்பட அரசு அலுவலர் கள் கலந்து கொண்டனர்.