கடற்கரை தூய்மையாக்கல் தின (செப்.17) நிகழ்வையொட்டி, கடற்கரை பகுதிகளை தூய்மையாக்கும் நடவடிக் கையை அதானி ஃபவுண்டேஷன் சிறப் பாக ஏற்பாடு செய்து நடத்தியது.
‘சுத்தமான கடல், பாதுகாப்பான கடல்’ என்ற இன்றியமையாத செய்தியை பொதுமக்களிடம் கொண்டுபோய் சேர்க் கும் ஒரு நடவடிக்கையாக கடலோர பகுதிகளை தூய்மையாக்கும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
காட்டுப்பள்ளி துறைமுகத்தின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 60 தன்னார்வ பணியாளர்களுடன் அத்துறை களின் தலைவர்களையும் உள்ளடக்கிய ஒரு குழு, சென்னை மாநகரில் அமைந்துள்ள பெசன்ட் நகர் கடற்கரையை தூய்மை யாக்கும் நடவடிக்கையில் பங்கேற்றது.
பிளாஸ்டிக்குகள், கண்ணாடி பொருட்கள், கிழிந்த வலைகள் மற்றும் பிற குப்பை கூளங்கள் போன்ற வீணான, கழிவுப்பொருட்களை கடற்கரையிலிருந்து இக்குழு 14 பைகளில் சேகரித்து (ஏறக் குறைய 80 – 90 AA) அப்பகுதியை தூய்மையாக்கியது.
இவ்வாறு சேகரிக்கப்பட்ட கடலோர கழிவுப் பொருட்களை வகை பிரிப்பதற்காகவும் மற்றும் மறுசுழற்சி செய்வதற்காகவும் பெருநகர சென்னை மாநகராட்சி சுகாதாரம் மற்றும் துப்புரவுத் துறையிடம் காட்டுப்பள்ளி துறைமுக தன்னார்வலர் குழு ஒப்படைத்தது.
இந்த தூய்மையாக்கல் நடவடிக்கையின் போது சேகரிக்கப்பட்ட கழிவுகளின் வகைகளை தன்னார்வலர்களுக்கு விளக்கிக் கூறும் ஓர் அமர்வும் நடத்தப்பட்டது.
கடலிலும் மற்றும் கடலோரப் பகுதிகளிலும் சுற்றுச்சூழலை மோசமான விளைவுகளுடன் எதிர்மறையாக எப்படி ஒவ்வொரு வகை கழிவும் பாதிக்கிறது என்று தன்னார்வலர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
கடற்கரைகளை தூய்மையாக பராமரிப் பதன் முக்கியத்துவம் மீது விழிப்புணர்வை மக்கள் மத்தியில் பரப்பவும் காட்டுப்பள்ளி துறைமுக தன்னார்வலர் குழு உறுதிமொழி ஏற்றது.
ஒவ்வொரு ஆண்டும் உலகெங்கி லும் செப்டம்பர் மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமையன்று கடலோர தூய்மையாக்கல் தினம் அனுசரிக்கப்படுகிறது.
உலகெங்கிலும் கடற்கரை களிலும் மற்றும் கடலிலும் அதிகரித்துவரும் மாசு குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்குவதன் மூலம் இயற்கை அன் னையை தூய்மையாக பராமரிப்பதை ஊக்குவிப்பதே கடலோர தூய்மையாக்கல் தினத்தின் நோக்கமாகும்.