சி.எஸ்.ஐ.பொறியியல் கல்லூரியின் 16-வது ஆண்டு பட்டமளிப்பு விழா கடந்த 24-ம் தேதி நடந்தது.
தென்னிந்தியத் திருச்சபையின் பேராயர் Rt.Rev.திமோத்தி ரவீந்தர் தலைமை தாங்கினார்.
அண்ணா பல்கலைக் கழக தர வரிசையில் 5-ம் இடம் பெற்ற கே.தீபா, 37-ம் இடம் பிடித்த ஆர்.மதன்ராஜ் ஆகியோருக்கு தங்கப் பதக்கம் உட்பட சுமார் 500 பேருக்கு பட்டங்கள் வழங்கினார்.
கோவை திருமண்டலத்தின் உப தலைவர் ரெவரெண்ட் ஜேக்கப் லிவிங்ஸ்டன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கல்லூரி தாளாளர் காட்வின் ஆர்.டேனியல் வரவேற்றார்.
முதல்வர் முனைவர் பி.டி.அருமைராஜ் வாழ்த்துரை வழங்கினார். ஏனைய திருமண்டலத்தின் ஆயர்கள் மற்றும் பெற்றோர் விழாவில் பங்கேற்றனர்.