fbpx
Homeபிற செய்திகள்சிவகங்கை மாவட்டத்தில் 18 பயனாளிகளுக்கு ரூ.26.80 லட்சம் நல உதவிகள்- கலெக்டர் வழங்கினார்

சிவகங்கை மாவட்டத்தில் 18 பயனாளிகளுக்கு ரூ.26.80 லட்சம் நல உதவிகள்- கலெக்டர் வழங்கினார்

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ப.மதுசூதன் ரெட்டி 18 பயனாளிகளுக்கு ரூ.26.80 இலட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நலத் துறையின் சார்பில் 7 பயனானிகளுக்கு தலா ரூ.5,000 மதிப்பிலான விலையில்லா சலவைப்பெட்டி ரூ.35,000 மதீப்பீட்டிலும், 7 பயனானிகளுக்கு தலா ரூ.5,000 மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்கள் ரூ.35,000 மதிப்பீட்டிலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் விலையில்லா உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு ரூ.9,904 மதிப்பீட்டிலான கருவிகளையும், நேற்று (மார்ச் 7) மாவட்ட ஆட்சியர் ப.மதுசூதன் ரெட்டி வழங்கினார்.

முதலமைச்சர் பொது நிவாரண நிதி வழங்கும் திட்டத்தின் கீழ், சிங்கம்புணரி வட்டம் கே.நெடுவயல் கிராமத்தில் கிராம உதவியாளராக பணிபுரிந்த பூசாரி என்ற பழனி கொரோனா நோய்த்தொற்று தடுப்பு பணியின்போது நோய்தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

அவருடைய குடும்பத்தினருக்கு ரூ.25 இலட்சம் மதிப்பிலான நிதியுதவி வழங்கப்பட்டது. திருப்பத்தூர் வட்டம் சோலு டையான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மருதுபாண்டியன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

அவரது குடும்பத்தினருக்கு ரூ.1 இலட்சம் மதிப்பிலான நிதியு தவி உட்பட மொத்தம் 18 பயனா ளிகளுக்கு ரூ.26.80 இலட்சம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளையும், 14 பயனாளிகளுக்கு சீர்மரபினர் நலவாரிய உறுப்பினர் அட்டையினையும் மாவட்ட ஆட் சியர் வழங்கினார்.

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை கோருதல், வங்கிக்கடன், மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை மற்றும் உபகரணங்கள் கேட்டல், குடும்ப அட்டை கோருதல் மற்றும் இதர மனுக்கள் போன்ற 302 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் மீது கவனம் செலுத்தி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ப.மதுசூதன் ரெட்டி உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ப.மணிவண்ணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சு.தனலட்சுமி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ந.மங்களநாதன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் மு.காமாட்சி, மாவட்ட வழங்கல் அலுவலர் சி.இரத்தினவேல், மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலர் து.கதிர்வேல், முதன்மை கல்வி அலுவலர் க.மணிவண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img