ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரிய கருப்பன், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வட்டம், மணப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற வட்ட அளவிலான மக்கள் குறைதீர்க்கும் முகாமில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, பல்வேறு துறையின் சார்பில் பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
உடன் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பிரபாகரன், சிங்கம்புணரி பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து உட்பட பலர் உள்ளனர்.