fbpx
Homeபிற செய்திகள்சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.84 இலட்சத்தில் திட்டப் பணிகள் விரைந்து முடிக்க ஆட்சியர் உத்தரவு

சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.84 இலட்சத்தில் திட்டப் பணிகள் விரைந்து முடிக்க ஆட்சியர் உத்தரவு

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்தில் நேற்று (மார்ச் 1) ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் மேற் கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணி களை மாவட்ட ஆட் சியர் ப.மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், இடையமேலூர் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் மூலம் ரூ.41 இலட்சம் மதிப்பீட்டில் கிராமச்சந்தை வளாகம் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டார் ஆட்சியர்.

பொதுமக்கள் நாள்தோறும் வந்து பயன் பெறக்கூடிய வகையில் உள்ளதால், போதியளவு உட் கட்டமைப்பு வசதிக ளுடன் பணிகளை திட்ட மிட்டபடி விரைந்து முடித் திட வேண்டும் என அலுவலர்களுக்கு அறி வுறுத்தினார்.

அதேபகுதியில் ரூ.5.40 இலட்சம் மதிப்பீட்டில் தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் மூலம் பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிக்கப்பட்டு வருவ தையும் பார்வையிட்டார்.

இங்கு பணியாற்றும் பணி யாளர்கள் நல்லமு றையில் பராமரித்து வரவேண்டும். இதன்மூலம் கிராம ஊராட்சிக்கு வருவாய் ஈட்டும் அளவிற்கு பல் வேறு மரங்களின் மூலம் பலவகையான பயன்கள் கிடைக்கும். எனவே, ஊராட்சிப் பணியாளர்கள் கண்காணித்து பராமரித் திட வேண்டும் என்றார்.

தமறாக்கி சாலையில் ரூ.14.60 இலட்சம் மதிப் பீட்டில் இடையமேலூர் பாசன் கண்மாயில் கட்டப்பட்டு உள்ள தடுப்பணையை பார்வையிட்டார். தடுப்பணைக்கு தண்ணீர் வரவுள்ள வரத்துக்கால்வாய் சீர் செய்து எப்போதும் தடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும்.

அப்பொழுதுதான் மழைக் காலங்களில் வரும் தண்ணீர் கண்மாய்க்கு வருவதுடன், தடுப்பணையில் தண்ணீர் தேங்குவதன் மூலம் விளைநிலப் பகுதிகளிலுள்ள ஆழ்துளைக் கிணறுகளில் நீர்மட்டம் உயருவதற்கு இதுபோன்ற திட்டங்கள் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

ஒத்தப்பட்டி ஊராட்சி யில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத் தில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு மையத்தை பார்வையிட்டார். அங்குள்ள பள்ளிக்கட்டடங் களை நடப்பு நிதியாண் டில் புதுப்பித்திட அலுவல ர்களுக்கு அறி வுறுத்தினார்.

அழகமாநேரி ஊராட் சியில் ரூ.23 இலட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடம் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டார். அப்பணியினை விரைந்து முடிக்க பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

அழகமாநேரி அரசு மேல்நிலைப்பள்ளி வளா கத்தில் தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் மூலம் மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிக்கப்பட்டு வருவதை பார்வையிட்டார்.

மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் அதிகளவு நிழல் தரும் மரங்கள் நடவு செய்து பராமரித்திட வேண்டுமென பணியாளர்களுக்கு ஆட் சியர் ப.மதுசூதன் ரெட்டி அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது, தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் உதவி திட்ட அலுவலர் செல்வராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரெத்தினவேல், அன்புச்செல்வி, உத விப் பொறியாளர் கார்த் தியாயினி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img