fbpx
Homeபிற செய்திகள்சிறு, குறு தொழில்களுக்கான வங்கி சேவை அறிமுகம்

சிறு, குறு தொழில்களுக்கான வங்கி சேவை அறிமுகம்

இணைய வங்கி சேவை நிறுவனம் பிளோ பிஜ் (FloBiz)) சிறு, குறுந்தொழில்களுக்கான வங்கி சேவையை ஸ்மார்ட் கலெக்ட் (Smart Collect) என்கிற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது.

நிறுவனத்தின் கணக்குப்பதிவு, ஜி.எஸ்.டி. விலைப்பட்டியலிடும் தயாரிப்பான myBillBook–ன் ஒரு பகுதியாக இந்த ஸ்மார்ட் வங்கி வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் கலெக்ட் மூலம் தங்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து யுபிஐ (UPI), வங்கிப் பரிவர்த்தனை போன்ற வகைகளில் நிறுவனங்கள் உடனடியாகப் பணத்தை பெற முடியும். நிலுவையிலுள்ள விலைப்பட்டியலுக்கான தொகையைக் கண்டறியவும் முடியும்.

நாடெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான சிறு, குறுந்தொழில்களுக்கு இணைய வங்கி மூலம் நிதி சேவைகளை வழங்குவதற்கான எதிர்காலம் எப்படி மாறப்போகிறது என்பதற்கான புதிய தொடக்கமாக இது அமைந்துள்ளது.

myBillBookமென்பொருளை கைபேசி, டெஸ்க்டாப் முறையில் ஏற்கெனவே பயன்படுத்தி வருபவர்களுக்கு ஸ்மார்ட் கலெக்ட் வசதி ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட தகுதிகளைக் கொண்ட மேலும் பரவலான பயனர்களுக்கு இந்த வசதியை அடுத்த சில வாரங்களில் அறிமுகப்படுத்த FloBiz திட்டமிட்டுள்ளது.

ஸ்மார்ட் கலெக்ட் என்பது எளிதில் தொடங்கவும் பயன்படுத்துவதற்கு வசதியாகவும் இயல்பான வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

myBillBooஇல் ஏற்கெனவே உள்ள வசதிகளுடன் Point-of-Sale (POS) விலைப்பட்டியலிடும் வசதி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.

சில்லறை விற்பனை, பிரான்செய்சீ தொழில் ஆகியவற்றுக்கு இந்த வசதி பயன்பட்டது.

தற்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஸ்மார்ட் கலெக்ட் சில்லறை விற்பனை அல்லாத, சில்லறை விற்பனை செய்யும் சிறு, குறுந்தொழில்களுக்கு பணத்தைச் செலுத்தவதற்கான சிறந்த வசதியாக இருக்கும்.

படிக்க வேண்டும்

spot_img