fbpx
Homeபிற செய்திகள்சிதம்பரம் நகர்மன்ற கூட்டத்தில் தலைவர் செந்தில்குமார் உறுதி ‘கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரப்படும்’

சிதம்பரம் நகர்மன்ற கூட்டத்தில் தலைவர் செந்தில்குமார் உறுதி ‘கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரப்படும்’

சிதம்பரம் நகர்மன்றக் கூட்டம் அதன் தலைவர் கே.ஆர்.செந்தில்குமார் தலைமையில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. நகராட்சி ஆணையர் அஜிதா பர்வீன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மன்ற உறுப்பினர்கள் ஜேம்ஸ் விஜயராகவன், அப்பு சந்திரசேகரன் ஆகியோர் பேசுகையில் உறுப்பினர்கள் அமர்வு படியை உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

மன்ற உறுப்பினர் ரமேஷ் பேசும்போது, தீபாவளி பண்டிகையின்போது சாலை ஓர கடைகளுக்கு அதிக தொகை வசூலிக்கப்பட்டது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தில்லை மக்கின் பேசும்போது, ராமகிருஷ்ணா பள்ளி அருகே செல்லும் கழிவு நீர் வடிகாலை தூர்வார வேண்டும், மேல வீதி பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதியில் மணிக்கூண்டு சரி செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

பின்னர் பேசிய நகர மன்ற தலைவர், சாலை யோர கடைகளுக்கு கூடுதல் தொகை வசூல் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். மணிக்கூண்டுகள் விரைவில் சீரமைக்கப்படும். அடுத்த இரு நாட்கள் கழிவுநீர் வடிகால் தூர்வாரப்படும், என்றார் கூட்டத்தில் நகர மன்ற துணை தலைவர் முத்துக்குமார் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img